அஸ்வின் சாதனையை அசால்ட்டாக வீழ்த்திய பும்ரா!

இந்திய அணி 3 விக்கெட்களை இழந்து சரிவிலிருந்த போது ரஹோனே பொறுப்புடன் விளையாடி இந்திய அணியின் கௌரவமான ரன்னை பெற செய்தார்.

அஸ்வின் சாதனையை அசால்ட்டாக வீழ்த்திய பும்ரா!
விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் பும்ரா
  • Share this:
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பும்ரா ஒரு விக்கெட் வீழ்த்தியன் மூலம் அஸ்வினின் டெஸ்ட் சாதனையை முறியடித்துள்ளார்.

இந்தியா மேற்கிந்திய தீவுகள் அணி போதும் முதல் டெஸ்ட் போட்டி ஆன்டிகுவா விவியன் ரிசர்ட்ஸ் மைதானத்தில் தொடங்கியது. இந்த டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி 297 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. கேப்டன் விராட் கோலி 9 ரன்களில் அவுட்டாகி ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தார். ரஹானே 81 ரன்களும், ஜடேஜா 58 ரன்களும் குவித்தனர்.


இந்திய அணி 3 விக்கெட்களை இழந்து சரிவிலிருந்த போது ரஹோனே பொறுப்புடன் விளையாடி இந்திய அணியின் கௌரவமான ரன்னை பெற செய்தார். இதன்பின் களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி இந்திய அணியின் வேகப்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர்.

மேற்கிந்திய தீவுகள் அணி 2ம் நாள் ஆட்டநேர முடிவில் 189 ரன்களுக்கு 8 விக்கெட்களை இழந்துள்ளது. இஷாந்த் சர்மா 5 விக்கெட்களை வீழ்த்தி மேற்கிந்திய தீவுகள் அணியை நிலைகுலைய செய்தார்.

இந்த போட்டியில் பிராவோ விக்கெட்டை யாக்கர் மன்னன் பும்ரா வீழ்த்தினர். இதன் மூலம் அஸ்வினின் படைத்திருந்த சாதனையை முறியடித்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் அஸ்வின் 2597 பந்துகளில் 50 விக்கெட்களை வீழ்த்தினார். பும்ரா 2464 பந்துகளில் 50 விக்கெட்களை வீழ்த்தி அவரது சாதனையை முறியடித்துள்ளார்.

Loading...

ஆனால் குறைந்த டெஸ்ட் போட்டிகளில் 50 விக்கெட்கள் வீழ்த்தியவர்களில் அஸ்வின் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். அஸ்வின் 9 டெஸ்ட் போட்டிகளில் 50 விக்கெட்கள் வீழ்த்தி உள்ளார். பும்ரா தனது 11வது டெஸ்ட் போட்டியில் தான் 50வது விக்கெட்டை வீழ்த்தி உள்ளார்.

Also Watch

First published: August 24, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...