பொருளாதார மீட்பை ஆஸி.யில் இந்திய அணியின் வெற்றியுடன் ஒப்பிட்ட நிர்மலா சீதாராமன்

பொருளாதார மீட்பை ஆஸி.யில் இந்திய அணியின் வெற்றியுடன் ஒப்பிட்ட நிர்மலா சீதாராமன்

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

மகாகவி ரவீந்திரநாத் தாகூரின் ‘விடியல் இன்னமும் இருளாக இருக்கும் போது ஒளியை உணரும் நம்பிக்கைப் பறவை’ என்ற கவிதையை மேற்கோள் காட்டினார்.

 • Share this:
  இன்று நாட்டின் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்தியாவின் முதல் காகிதமில்லா பட்ஜெட்டை வாசிக்கத் தொடங்கி விட்டார்.

  முதல் பகுதியை அவர் படித்துக் கொண்டிருக்கிறார். தொடக்கத்தில் அவர் மிகவும் அசாதாரண காலக்கட்டத்தில் இந்தப் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதாகத் தெரிவித்தார்.

  மேலும் பிரதமரின் கரீப் கல்யாண் திட்டம் உள்ளிட்ட பல திட்டங்கள் கொரோன பெருந்தொற்று காலத்திலும், லாக்டவுனிலும் கூட நிறைவேற்றப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். முதலில் கொரோனா முதநிலை பணியாளர்களுக்கு நன்றி நவிலலுடன் அவர் தொடங்கினார்.

  ஆத்மநிர்பார் நிவாரணத் தொகுப்பை, ஆர்பிஐ நிவாரணத் தொகுப்பை, அதாவது ரூ.20 லட்சம் கோடிக்கான கொரோனா நிவாரணத் தொகுப்பு ஜிடிபியில் 13% என்று குறிப்பிட்டார், மேலும் இது 5 மினி பட்ஜெட்டுக்கு ஒப்பானது என்றார்.

  ஆஸ்திரேலியாவில் இந்திய அணி 0-1 என்ற தோல்வி நிலையிலிருந்து மீண்டெழுந்து 2-1 என்று வெற்றி பெற்றதைக் குறிப்பிட்டு, “ஆஸ்திரேலியாவின் இந்திய அணியின் வெற்றி இந்திய மக்களின் உள்ளார்ந்த பலத்தைக் காட்டுகிறது” என்றார்.

  மகாகவி ரவீந்திரநாத் தாகூரின் ‘விடியல் இன்னமும் இருளாக இருக்கும் போது ஒளியை உணரும் நம்பிக்கைப் பறவை’ என்ற கவிதையை மேற்கோள் காட்டினார்.
  Published by:Muthukumar
  First published: