தீவிரவாத மிரட்டல் விடுத்த ஆஸி.வீரர் கவாஜாவின் சகோதரர் கைது!

Brother Of Australian Cricketer Arrested | ஆஸ்திரேலிய பிரதமரைக் கொலை செய்ய நிஜாமுதீன் திட்டமிட்டுள்ளதாக அர்சகான் கவாஜா காவல்துறையினருக்கு பொய்யான தகவலை அளித்துள்ளார்.

news18
Updated: December 4, 2018, 5:00 PM IST
தீவிரவாத மிரட்டல் விடுத்த ஆஸி.வீரர் கவாஜாவின் சகோதரர் கைது!
சகோதரருடன் கவாஜா (இடது) (Facebook)
news18
Updated: December 4, 2018, 5:00 PM IST
தீவிரவாத மிரட்டல் விடுத்த புகாரில் ஆஸ்திரேலிய அணியின் முன்னணி பேட்ஸ்மேனான கவாஜாவின் சகோதரரை அந்நாட்டு காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னணி இடது கை பேட்ஸ்மேன் உஸ்மான் கவாஜா(31). பாகிஸ்தானை பூர்வீகமாக கொண்ட இவர், சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வருகிறார். இந்தியா உடனான கிரிக்கெட் தொடரிலும் களமிறங்குவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

அண்மையில், சிட்னி புறநகர் பகுதியில் இவரது சகோதரர் அர்சகான் கவாஜா (39) காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். அர்சகான் கவாஜாவுக்கும், நிஜாமுதீன் என்பவருக்கும் ஒரு பெண்ணை காதலிப்பதில் போட்டி எழுந்துள்ளது. ஆஸ்திரேலிய பிரதமரைக் கொலை செய்ய நிஜாமுதீன் திட்டமிட்டுள்ளதாக அர்சகான் கவாஜா காவல்துறையினருக்கு பொய்யான தகவலை அளித்துள்ளார்.

Khawaja And Brother
சகோதரருடன் கவாஜா (இடது) (Facebook)


காவல்துறையினர் நடத்திய விசாரணையில், உஸ்மான் கவாஜாவின் சகோதரர் அர்சகான் கவாஜா, நிஜாமுதீனை காவல்துறையினரிடம் சிக்க வைப்பதற்காக பிரதமரைக் கொலை செய்யப்போதாக அவரது டைரியில் எழுதியது கண்டுபிடிக்கப்பட்டது.

இன்று அதிகாலை உஸ்மான் கவாஜாவின் வீட்டுக்குச் சென்று அவரின் சகோதரர் அர்சகான் கவாஜாவை காவல்துறையினர் கைது செய்தனர். இலங்கையைச் சேர்ந்த நிஜாமுதீனை விடுதலை செய்து, அவரின் நீதிமன்றச் செலவுகளையும் காவல்துறையினர் திரும்ப அளித்துள்ளனர். விளையாட்டாக எழுதி வைத்தது தற்போது அவருக்கே வினையாக மாறிவிட்டது.

Also Watch...
Loading...
First published: December 4, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்