ஸ்மித்தை வெளியேற்றினார் வாஷிங்டன் சுந்தர்: டெஸ்ட்டின் முதல் விக்கெட்டே ஜாம்பவானை வீழ்த்தி அசத்தல்

முதல் டெஸ்ட் விக்கெடே ஸ்டீவ் ஸ்மித். வாஷிங்டன் சுந்தர் அசத்தல்

ஒரு ஃபுல் லெந்த் பந்து, வேகமாக ஸ்மித் பேடுக்கு வீசினார். ஸ்மித் அதை தரையோடு ஆடாமல் சற்றே காற்றில் ஆடினார். ரோஹித் சர்மா பிடித்து விட்டு வாஷிங்டன் சுந்தரை ஆரத் தழுவினார்.

 • Share this:
  பிரிஸ்பன் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் உணவு இடைவேளை முடிந்து அபாயகரமாக ஆடி வந்த ஸ்டீவ் ஸ்மித் விக்கெட்டை அறிமுக தமிழக ஸ்பின்னர் வாஷிங்டன் சுந்தர் வீழ்த்தி, தன் முதல் டெஸ்ட் விக்கெட்டை கைப்பற்றினார்.

  ஆஸ்திரேலியா அணி 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 91 ரன்கள் எடுத்துள்ளது.

  ஸ்டீவ் ஸ்மித் சற்று முன் 36 ரன்களில் வாஷிங்டன் சுந்தர் பந்தை ஷார்ட் மிட் ஆனில் ரோஹித் சர்மாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

  மீண்டும் வலுவான லெக் திசை பீல்டிங்கை அமைத்தார் ரஹானே. ஏற்கெனவே முதல் 3 ஒவர்களை மெய்டனாக்கிய வாஷிங்டன் சுந்தர் இன்னமும் தன் முதல் ரன்னைக் கொடுக்கவில்லை.

  ஒரு ஃபுல் லெந்த் பந்து, வேகமாக ஸ்மித் பேடுக்கு வீசினார். ஸ்மித் அதை தரையோடு ஆடாமல் சற்றே காற்றில் ஆடினார். ரோஹித் சர்மா பிடித்து விட்டு வாஷிங்டன் சுந்தரை ஆரத் தழுவினார். இந்திய அணியின் முகத்தில் மகிழ்ச்சி.

  ஏனெனில் ஸ்மித் விக்கெட்டை இந்த டெஸ்ட் போட்டியில் வீழ்த்த போகும் பவுலர் யார் என்ற கேள்வி எழுந்தது. அதை வாஷிங்டன் சுந்தர் நிறைவேற்றியுள்ளார்

  அஸ்வினிடம் இந்திய டெஸ்ட் தொப்பியை வாங்கிக் கொண்ட சுந்தர், அதற்கேற்ப ஸ்மித்த வீழ்த்தி அஸ்வினுக்குப் பெருமை சேர்த்துள்ளார்.

  தற்போது லபுஷேன் 35 ரன்களுடனும், வேட் 4 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். ஆஸ்திரேலியா 93/3.
  Published by:Muthukumar
  First published: