நடராஜன், சுந்தர், ஷர்துல் தலா 3 விக். : 315/8-லிருந்து நழுவ விட்ட இந்தியப் பந்து வீச்சு: ஆஸி. 369 ஆல் அவுட்
2ம் நாளான இன்று பிட்ச் சற்றே வேகம் அடைந்துள்ளது, கொஞ்சம் பவுன்ஸ், ஸ்விங் நேற்றை விட அதிகமாக உள்ளது, இந்திய அணிக்கு சிக்கல் காத்திருக்கிறது.

ஆஸி. 369 ஆல் அவுட்.
- News18 Tamil
- Last Updated: January 16, 2021, 8:14 AM IST
பிரிஸ்பன் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி தன் முதல் இன்னிங்சில் 369 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. 315/8-லிருந்து பின் வரிசை வீரர்களை இந்திய அணி மீண்டும் ஆடவிட்டது.
ஆனாலும் அனுபவமற்ற வீச்சாளர்களை வைத்துக் கொண்டு 400 ரன்களுக்குள் ஆஸ்திரேலியாவைச் சுருட்டியது பெரிய விஷயம்தான். ஷர்துல் தாக்குர், நடராஜன், சுந்தர் ஆகிய அனுபவமற்ற பவுலர்கள் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
ஆனால் 2ம் நாளான இன்று பிட்ச் சற்றே வேகம் அடைந்துள்ளது, கொஞ்சம் பவுன்ஸ், ஸ்விங் நேற்றை விட அதிகமாக உள்ளது, இந்திய அணிக்கு சிக்கல் காத்திருக்கிறது. இன்று காலை 274/5 என்று தொடங்கியது ஆஸ்திரேலியா, டிம் பெய்ன் 38 ரன்களுடனும் கிரீன் 28 ரன்களுடனும் தொடங்கினர். இருவரும் 12 ஓவர்கள் ஆடினர். ஸ்கோர் 311 ரன்களுக்குச் சென்ற போது ஷர்துல் தாக்குர் இன்றைய முதல் விக்கெட்டைக் கைப்பற்றினார்.
டிம் பெய்ன் இந்தத் தொடரில் தன் 2வது அரைசதம் எடுத்து முடித்தவுடன் 50 ரன்களில் ஷர்துல் தாக்கூர் வீசிய அவுட் ஸ்விங்கருக்கு காலும் நகராமல் ஒன்றும் நகராமல் மட்டையை மட்டும் கொண்டு செல்ல எட்ஜ் எடுத்து ஸ்லிப்பில் ரோஹித் கையில் உட்கார்ந்தது.
உடனேயே கேமரூன் கிரீன் 47 ரன்களில் வாஷிங்டன் சுந்தர் வீசிய அற்புதமான பந்தில் பவுல்டு ஆனார். பந்து காற்றில் மிடில் அண்ட் லெக்கிற்கு வந்து வெளியே ஸ்பின் ஆகும் என்று எதிர்பார்த்தார் கிரீன் ஆனால் பந்து நின்று ஸ்டம்புக்குள் திரும்ப பவுல்டு ஆனார். கிரீன், பெய்ன் சேர்ந்து 6வது விக்கெட்டுக்காக 98 ரன்களைச் சேர்த்தனர்.பாட் கமின்ஸ் இறங்கி 2 ரன்கள் எடுத்து ஷர்துல் தாக்கூரின் ஃபுல் பந்தில் எல்.பி.ஆகி வெளியேறினார் ரிவியூ பலனளிக்கவில்லை. நேதன் லயன் இறங்கி அபாரமான புல் ஷாட் மற்றும் ஒரு நேர் ட்ரைவ் உடன் 4 பவுண்டரிகள் அடித்து 24 ரன்கள் எடுத்தார், இவரும் கடைசியில் வாஷிங்டன் சுந்தர் பந்தை ஸ்வீப் ஆடும் முயற்சியில் லெக் ஸ்டம்பை இழந்தார்.
மிட்செல் ஸ்டார்க் ஒரு சிக்சருடன் 20 ரன்களையும் ஹேசில்வுட் 11 ரன்களையும் எடுத்து ஸ்கோரை 369க்குக் கொண்டு சென்ற போது நடராஜன் வந்து ஹேசில்வுட்டை பவுல்டு செய்தார். இந்திய அணி உதிரிகளாக 20 ரன்களைக் கொடுத்தது. 315/8 என்ற நிலையிலிருந்து கடைசி 2 விக்கெட்டுகள் 54 ர்ன்களை அடிக்க அனுமதித்தது.
இந்திய அணியில் அறிமுக பவுலர்கல் டி.நடராஜன், சுந்தர் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்ற ஷர்துல் தாக்குர் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். உணவு இடைவேளைக்குப் பிறகு இந்திய அணி களமிறங்கும். பிட்ச் கொஞ்சம் வேகம் எடுத்துள்ளது.
ஆனாலும் அனுபவமற்ற வீச்சாளர்களை வைத்துக் கொண்டு 400 ரன்களுக்குள் ஆஸ்திரேலியாவைச் சுருட்டியது பெரிய விஷயம்தான். ஷர்துல் தாக்குர், நடராஜன், சுந்தர் ஆகிய அனுபவமற்ற பவுலர்கள் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
ஆனால் 2ம் நாளான இன்று பிட்ச் சற்றே வேகம் அடைந்துள்ளது, கொஞ்சம் பவுன்ஸ், ஸ்விங் நேற்றை விட அதிகமாக உள்ளது, இந்திய அணிக்கு சிக்கல் காத்திருக்கிறது.