பிரிஸ்பன் ஓட்டலில் டாய்லெட் சுத்தம் செய்ய ஆள் இல்லை, உணவகம் செல்லக்கூடாது, ஏகப்பட்ட கெடுபிடிகள்: இந்திய அணி வீரர்கள் தவிப்பு

பிரிஸ்பன் ஓட்டலில் டாய்லெட் சுத்தம் செய்ய ஆள் இல்லை, உணவகம் செல்லக்கூடாது, ஏகப்பட்ட கெடுபிடிகள்: இந்திய அணி வீரர்கள் தவிப்பு

பிரிஸ்பனில் கட்டுப்பாடுகளால் இந்திய வீரர்கள் அதிருப்தி.

வீரர்கள் தங்கள் அறைகளுக்குள் மாறி மாறி செல்லலாம். தேவையான படுக்கை வசதிகளை அவர்களே செய்து கொள்ள வேண்டும், டாய்லெட் சுத்தம் செய்யவும் பணியாளர்கள் கிடையாது,

 • Last Updated :
 • Share this:
  பிரிஸ்பன் சென்ற இந்திய கிரிக்கெட் குழுவுக்கு ஆஸ்திரேலியாவில் கொரோனா பரவல் காரணமாக  அம்மாகாணம் கடும் விதிமுறைகளையும் கட்டுப்பாட்டுகளையும் விதித்தது, இதனால் இந்திய அணியினர் பிரிஸ்பன் செல்ல எதிர்ப்பு தெரிவித்தனர்.

  வெளியில் எந்தக் கட்டுப்பாடுகளும் இல்லை, கடற்கரையில் மக்கள் கூடுகின்றனர், ஹோட்டல்களில் சாப்பிடுகின்றனர், எங்களுக்கு மட்டும் கட்டுப்பாடா என்று இந்திய கிரிக்கெட் அணியினர் கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்.

  ஆனால் இந்திய கிரிக்கெட் வாரியத்துடன் பேசி பிரிஸ்பன் டெஸ்ட் போட்டிக்கு ஒருவழியாக இந்திய வீரர்கள் ஒப்புக் கொண்டனர்.

  இதனையடுத்து 15ம் தேதி தொடங்கும் பிரிஸ்பன் டெஸ்ட் போட்டிக்காக இந்திய கிரிக்கெட் குழு பிரிஸ்பனில் உள்ள ஒரு விடுதிக்கு தங்க வந்தனர்.

  ஆனால் வந்த பிறகுதான் தெரிந்தது ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன என்பது. வீரர்கள் தங்கள் அறை இருக்கும் தளத்தை விட்டு வேறு தளத்துக்குச் செல்லக்கூடாது.

  வீரர்கள் தங்கள் அறைகளுக்குள் மாறி மாறி செல்லலாம். தேவையான படுக்கை வசதிகளை அவர்களே செய்து கொள்ள வேண்டும், டாய்லெட் சுத்தம் செய்யவும் பணியாளர்கள் கிடையாது, வீரர்களே சுத்தம் செய்து கொள்ள வேண்டும் என்று ஏகப்பட்ட கெடுபிடிகள் இருப்பதையடுத்து இந்திய வீரர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

  பணியாளர்கள் செல்ல அனுமதி கிடையாது. உணவு வாங்க உணவகம் செல்லக் கூடாது, செயலி மூலம் ஆர்டர் செய்து கொள்ள வேண்டும்.

  இது தொடர்பாக பெயர் கூற விரும்பாத இந்திய வீரர் ஒருவர் ஆஸி. ஊடகம் ஒன்றிற்குக் கூறும்போது, ஒட்டுமொத்த ஓட்டலும் காலியாக உள்ளது. நீச்சல் குளம், ஜிம் ஆகியவற்றைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

  விடுதியில் உள்ள உணவகம், காப்பி ஷாப் ஆகியவை மூடப்பட்டுள்ளன. ஓட்டலே காலியாக இருக்கும் போது இவற்றைப் பயன்படுத்த அனுமதி அளிக்காதது விசித்திரமாக உள்ளது, என்றார்.

  ஓட்டல் நிர்வாகமோ இந்தக் கட்டுப்பாடுகள் இந்திய வீரர்களுக்கு மட்டுமல்ல ஆஸ்திரேலிய வீரர்களுக்கும்தான் என்று கூறுகிறது.

  வீரர்கள் எதிர்ப்பையடுத்து கங்குலி, ஜெய் ஷா தலையிட்டு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதாக தெரிகிறது.
  Published by:Muthukumar
  First published: