உலகக்கோப்பைகளை வென்றிருக்கலாம்... இது ‘ஸ்பெஷல்’ - சேவாக், சச்சின், லஷ்மண் கொண்டாட்டம்
உலகக்கோப்பைகளை வென்றிருக்கலாம்... இது ‘ஸ்பெஷல்’ - சேவாக், சச்சின், லஷ்மண் கொண்டாட்டம்
பிரிஸ்பன், ரிஷப் பந்த், சிராஜ்.
தினேஷ் கார்த்திக்: என்ன நடந்தாலும் சரி நாம் இந்தியா என்ற பெயருடைய அணியாகவே ஆடுவோம். இப்படிப்பட்ட ஆட்டத்தையெல்லாம் தினசரி நாம் பார்க்க முடியாது. தலை வணங்குகிறேன் சாம்பியன்களே.
ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பன் கோட்டையைத் தகர்த்து தொடர்ச்சியாக இருமுறை சிங்கத்தின் குகைக்குள் புகுந்து அதன் பிடரியையே உலுக்கி இந்திய அணி பெற்ற வரலாற்று தொடர் வெற்றியை சச்சின் டெண்டுல்கர், சேவாக், லஷ்மண் உள்ளிட்ட முன்னாள் வீரர்கள் கொண்டாடித் தள்ளுகின்றனர்.
சச்சின் டெண்டுல்கர்: ஒவ்வொரு செஷனிலும் நாம் ஒரு ஹீரோவைக் கண்டுப்பிடித்தோம். ஒவ்வொரு முறை அடி வாங்கிய போதும் நிமிர்ந்து நின்றோம். நம்பிக்கையின் எல்லைகளை நகர்த்தி நகர்த்தி அச்சமற்ற கிரிக்கெட்டை ஆடினோம், ஆனால் பொறுப்பற்ற கிரிக்கெட்டை ஆடவில்லை. காயங்களை நம்பிக்கை, நிதானத்துடன் எதிர்கொண்டோம். கிரேட்டஸ்ட் சீரிஸ் வின், கங்கிராட்ஸ் இந்தியா!
விரேந்திர சேவாக்: இது புதிய இந்தியா, அடிலெய்டில் நடந்த சரிவிலிருந்து இந்த வெற்றி! இந்த இளம் வீரர்கள் நமக்கு வாழ்நாளின் மகிழ்ச்சியை கொடுத்து விட்டனர். உலகக்கோப்பை வெற்றிகள் இருந்தாலும் இது ஸ்பெஷல். ஆம்! கூடுதல் காரணம் உள்ளது, ரிஷப் பந்த் கூடுதல் ஸ்பெஷல்.
விவிஎஸ் லஷ்மண்: இந்திய அணிக்கு வரலாற்று வெற்றி. தேவைப்படும் போது இளைஞர்கள் திறமையை காட்டினர். இதில் கில், பந்த் முன்னிலை வகிக்கின்றனர். ரவிசாஸ்திரி, உதவிப் பயிற்சியாளர்களுக்கு ஹேட்ஸ் ஆஃப். இந்த அணியைக் கண்டு மிக மிக பெருமை அடைகிறோம். இது யுகங்களுக்கான வெற்றி.
இர்பான் பத்தான்: டீம் இந்தியாவுக்கு மிகப்பெரிய தொடர் வெற்றி!
வருண் சக்ரவர்த்தி: டெஸ்ட் கிரிக்கெட்டைப் பார்ப்பதைப் போன்ற ஒரு இன்பம் வேறு எதுவும் இல்லை. டெஸ்ட் கிரிக்கெட் அதன் சிறப்பின் உச்சத்தில் இருந்தது. இந்த வெற்றி வரும் தலைமுறைகளுக்கு அகத்தூண்டுதல். டீம் இந்தியா.. யூ பியூட்டி.
தினேஷ் கார்த்திக்: என்ன நடந்தாலும் சரி நாம் இந்தியா என்ற பெயருடைய அணியாகவே ஆடுவோம். இப்படிப்பட்ட ஆட்டத்தையெல்லாம் தினசரி நாம் பார்க்க முடியாது. தலை வணங்குகிறேன் சாம்பியன்களே.
முகமது ஷமி: வாழ்த்துக்கள், வெல்டன் பாய்ஸ்.
இன்னும் பலதரப்புகளிலிருந்தும் வாழ்த்து மழை குவிந்து வருகின்றன.
Published by:Muthukumar
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.