ஆஸி.யின் 1033 விக்கெட்டுகளும் இந்திய அணியின் 13 விக்கெட்டுகளும்: இந்த அதிசயம் முன்பு நடந்ததுண்டா?

இந்திய-ஆஸ்திரேலிய சுவாரஸிய புள்ளி விவரம்.

1020 என்ற இந்த இடைவெளி பெரிய இடைவெளியாக அமைந்தது.

 • Share this:
  இந்திய அணி இந்தத் தொடரில் ஏகப்பட்ட காயங்களுடன் ஆடி வருகிறது, நிறைய வீரர்கள் காயத்தினால் வெளியேற இந்தத் தொடரில் மட்டும் இந்தியா 20 வீரர்களைக் களமிறக்கியுள்ளது. இது போல் நடந்ததில்லை. 2013-14 ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலியாவில் இங்கிலாந்து 18 வீரர்களைப் பயன்படுத்தியது.

  ஆனால் இன்னொரு புள்ளி விவரம் இதை விடவும் சுவாரஸ்யமானது. ஆஸ்திரேலிய அணியில் பிரிஸ்பன் டெஸ்ட் போட்டியில் ஆடும் 11 வீரர்களின் மொத்த டெஸ்ட் விக்கெட்டுகளைக் கணக்கிட்டால் 1033. மாறாக பிரிஸ்பனில் ஆடும் இந்திய வீரர்களின் மொத்த விக்கெட்டுகளையும் கணக்கெடுத்தால் மொத்தம் 13 விக்கெட்டுகளே. இந்த ஆச்சரியகரமான புள்ளி விவரத்தை ஈஎஸ்பிஎன் கிரிக் இன்போவின் புள்ளி விவரக் குழு வெளியிட்டுள்ளது.

  அதாவது ஒரு அணியில் ஆடும் 11 வீரர்களின் மொத்த விக்கெட்டுகள் 1000த்திற்கும் மேல் இருக்க இன்னொரு அணியில் ஆடும் வீரர்களின் மொத்த டெஸ்ட் விக்கெட்டுகள் 100க்கும் கீழ் இருந்ததில்லை, அதிலும் 15க்கும் கீழ் என்று இந்திய அணியின் பிரிஸ்பன் டெஸ்ட்டில் ஆடும் வீரர்களின் விக்கெட்டுகள் மொத்தமே 13 தான்.

  1020 என்ற இந்த இடைவெளி பெரிய இடைவெளியாக அமைந்தது.

  இதற்கு முன்பாக இரு அணி வீரர்கள் விக்கெட்டுகள் கணக்கில் இவ்வளவு பெரிய இடைவெளி இருந்தது 2005-06 அடிலெய்ட் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வீரர்கல் 11 பேரின் விக்கெட்டுகள் கணக்கு 1521 என்று இருக்க, மே.இ.தீவுகளின் 11 வீரர்களின் விக்கெட்டுகள் கணக்கு 215 ஆக இருந்தது.
  Published by:Muthukumar
  First published: