• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • வார்னரை காலி செய்த சுந்தர்; லபுஷேன், வேட் ஆகியோரை ஒரே ஓவரில் அனுப்பிய சிராஜ்: ஆஸ்திரேலியா திணறல்

வார்னரை காலி செய்த சுந்தர்; லபுஷேன், வேட் ஆகியோரை ஒரே ஓவரில் அனுப்பிய சிராஜ்: ஆஸ்திரேலியா திணறல்

முகமது சிராஜ்

முகமது சிராஜ்

பிரிஸ்பன் டெஸ்ட் போட்டியின் 4ம் நாள் ஆட்டத்தில் உணவு இடைவேளை வரை ஆஸ்திரேலியா அணி தன் 2வது இன்னிங்சில் 149/4 என்று மொத்தம் 182 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

  • Share this:
    பிரிஸ்பன் டெஸ்ட் போட்டியின் 4ம் நாள் ஆட்டத்தில் உணவு இடைவேளை வரை ஆஸ்திரேலியா அணி தன் 2வது இன்னிங்சில் 149/4 என்று மொத்தம் 182 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

    ஸ்டீவ் ஸ்மித் 28 ரன்களுடனும் கேமரூன் கிரீன், நடராஜன் பந்தில் தப்பிய ஒரு நெருக்கமான எல்.பி. வாய்ப்பின் மூலம் 4 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

    21/0 என்று தொடங்கிய ஆஸ்திரேலியா 128 ரன்கள் சேர்த்து 4 விக்கெட்டுகளை இழந்தது. நல்ல இடத்தில் பிட்ச் செய்தால் பந்து ஸ்விங் ஆகிறது, எகிறுகிறது. 250 ரன்கள் இலக்கு நிர்ணயித்தாலே இங்கு விரட்டுவது கடினம் என்றே கிரிக்கெட் வல்லுநர்கள் கருதுகின்றனர்.

    மார்கஸ் ஹாரிஸும், வார்னரும் இன்று இந்திய பவுலர்களின் சரியில்லாத லெந்த்தை நன்றாகப் பயன்படுத்தி சிலபல பவுண்டரிகளை அடித்து முதல்ல் விக்கெட்டுக்காக 89 ரன்களைச் சேர்த்தனர். ரன் விகிதமும் நன்றாகச் சென்று கொண்டிருந்தது. நடராஜன் ஒரே ஓவரில் 14 ரன்கள் விளாசப்பட்டார், இதனையடுத்து ஷர்துல் தாக்குர் பந்து வீச அழைக்கப்பட்டார். நவ்தீப் சைனியும் மைதானத்தில் இருந்தார். பிறகு வீசினார். ஆனால் வேகம் போய் விட்டது.

    தாக்குர் நன்றாக வீசினார். ஹாரிஸ் 38 ரன்களில் 8 பவுண்டரிகள் அடித்து நன்றாக ஆடி வந்த போது மிடில் அண்ட் லெக்கில் நன்றாக குறிவைத்து ஷார்ட் பந்து ஒன்றை வீசினார் தாக்குர், ஹாரிஸ் குனிந்தார், ஆனால் கிளவ்வை இறக்கவில்லை. பந்து பட்டு பந்த்திடம் செல்ல கேட்ச் ஆனது. முதல் விக்கெட்டை ஆஸ்திரேலியா இழந்தது.

    வார்னர் 75 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் 48 ரன்கள் எடுத்து அபாயகரமாகத் திகழ்ந்தார். ஆனால் வாஷிங்டன் சுந்தர் ரவுண்ட் த விக்கெட்டில் வந்து பந்தை ஸ்டம்பில் பிட்ச் செய்து நேராகச் செல்லுமாறு வீசினார், வார்னர் முன் காலை நகர்த்தி ஆடாமல் நின்ற இடத்திலேயே ஆடியதால் பந்து பீட் ஆகி பின் கால்காப்பைத் தாக்கியது பிளம்ப் எல்.பி.

    2 விக்கெட்டுகள் அடுத்தடுத்து விழுந்ததால் நின்று பிரயோஜனம் இல்லை என்று லபுஷேன் எதிர்த்தாக்குதல் இன்னிங்சை ஆடி 5 பவுண்டரிகளுடன் 22 பந்துகளில் 25 ரன்கள் என்று அபாயகரமாகத் திகழ்ந்தார் அப்போது சிராஜ் வந்தார். கூடுதல் பவுன்ஸ் ஆன பந்தை லபுஷேன் ஆடித்தான் ஆக வேண்டும் என்ற லெந்த் ஆடினார் ஆனால் பந்து எட்ஜ் ஆகி 2வது ஸ்லிப்பில் ரோஹித்திடம் கேட்ச் ஆனது. ஆஸி. 123/3.

    அதே ஓவரின் கடைசி பந்தில் மேத்யூ வேட் (0) விக்கெட்டைக் கொடுத்தார். ஆம்; லெக் திசையில் சென்ற பந்தை தொட்டார், பந்திடம் கேட்ச் ஆனது. வெளியேறினார். சிராஜ் ஒரே ஓவரில் அபாரமாக 2 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆஸ்திரேலியாவை பின்னுக்குத்தள்ளினார்.

    ஆனால் ஸ்டீவ் ஸ்மித் தற்போது 31 ரன்களுடனும் கிரீன் 4 ரன்களுடனும் ஆடி வருகின்றனர், ஆஸி. 152/4.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: