கடந்த முறை சிட்னி டெஸ்ட் போட்டியில் 407 ரன்கள் வெற்றி இலக்கை எதிர்த்து இந்திய அணி முதலில் வெற்றி பெற முயன்று ஆஸி.யை மிரட்டி பிறகு அஸ்வின், விஹாரி மூலம் அருமையான டிராவைச் செய்து ஆஸ்திரேலிய அணியை கடுமையக கடுப்பேற்றியதை அவர்களும், நாமும் மறப்பதற்கில்லை.
சிட்னி பிட்ச் 5ம் நாளன்றும் நல்ல பேட்டிங் பிட்ச் ஆக இருந்தது, பிட்ச் உடையவில்லை என்பதையும் நாம் மறக்கலாகாது,
ஆனால் பிரிஸ்பன் பிட்ச் அப்படியல்ல, இந்த முறை பிட்சில் கொஞ்சம் வெடிப்புகள் உள்ளன, அதில் பட்டால் பந்துகள் எகிறுகின்றன, மேலும் நேதன் லயனுக்கு வாகாக வலது கை பேட்ஸ்மெனுக்கு சிரமம் கொடுக்கும், ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே பிட்ச் ஆகுமிடத்தில், ஸ்பாட் ஒன்று உள்ளது, அதை லயன் நிச்சயம் பயன்படுத்துவார்.
இந்த நிலையில் சிட்னி டிரா கனவில் இந்திய அணி இருக்க வேண்டாம், சிட்னி வேறு, பிரிஸ்பன் வேறு என்று ஸ்டீவ் ஸ்மித் எச்சரிக்கிறார், அவரே இன்று பிளவில் பட்டு எகிறிய சிராஜ் பந்தில் வெளியேறினார். பிரிஸ்பனில் ஆஸ்திரேலியாவை ஜெயிப்பது மிகமிகக் கடினம். இந்தியா இதைச் செய்யுமா, மழை வருமா, குறைந்தது டிரா செய்ய முடியுமா? என்று பல ஹேஷ்யங்கள் எழுந்து வருகின்றன.
இந்நிலையில் ஸ்மித் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
இந்த டெஸ்ட் எங்களுக்குச் சாதகமாக நல்ல நிலையில் உள்ளது. பிட்ச் சிலபல வேலைகளை இன்று காட்டியது. பந்துகள் திடீர் திடீரென எகிறின. எனவே நாளை சரியான இடத்தில் பந்தை பிட்ச் செய்தால் பலனளிக்கும். ஆனால் கேட்ச்களை பிடிக்க வேண்டும், இது முக்கியம்.
இந்திய பேட்ஸ்மென்கள் சிட்னியில் நன்றாக ஆடினர். 130 ஓவர்களைச் சமாளித்தார்கள். ஆனால் இது பிரிஸ்பன், இந்தப் பிட்ச் வித்தியாசமானது. எங்களைப் பொருத்தவரையில் அதிகம் ட்ரை பண்ணாமல் சரியான இடத்தில் பந்தை வீசி பிட்ச் என்ன செய்கிறதோ அதைப் பயன்படுத்தி பொறுமை காப்பது அவசியம்.
இது போன்ற பிட்ச்களில் தேடித்தேடி புதிது புதிதாக வீசினால் பரிசு கிடைப்பது கடினம், இதில் சரியான இடத்தில் வீசி பொறுமையுடன் காத்திருப்பது அவசியம்.
மிகவும் சுவாரசியமான இறுதி நாள், நாங்கள் மிகவும் ஆவலுடன் எதிர்நோக்குகிறோம்.
வலது கை பேட்ஸ்மென்கள் பேட் செய்யும் போது ஆப் ஸ்டம்புக்கு வெளியே உள்ள கீறல் அவர்களுக்கு தொல்லை தரும், லயன் அதைப் பயன்படுத்துவார்.
இவ்வாறு கூறினார் ஸ்மித்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: India vs Australia, Steve Smith