ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

விரைவில் உலகக்கோப்பை வெல்வோம்.. யாரைப்பார்த்தும் பயம் இல்லை: கர்ஜித்த ரஷித் கான்!

விரைவில் உலகக்கோப்பை வெல்வோம்.. யாரைப்பார்த்தும் பயம் இல்லை: கர்ஜித்த ரஷித் கான்!

ரஷித் கான். (ICC)

ரஷித் கான். (ICC)

Bring on the ICC #WorldCup, we fear no one: #RashidKhan | ஆப்கானிஸ்தான் அணி தனது 2-வது டெஸ்டிலேயே முதல் வெற்றியை ருசித்துள்ளது.

  • News18
  • 1 minute read
  • Last Updated :

உலகக்கோப்பையை விரைவில் கொண்டு செல்வோம், சர்வதேச அளவில் எந்த அணியைப் பார்த்தும் ஆப்கானிஸ்தான் அணி பயப்படவில்லை, என அந்த அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான் தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தான் - அயர்லாந்து அணிகள் இடையிலான கிரிக்கெட் தொடர் இந்தியாவின் உத்தர காண்ட் மாநிலத்தில் நடைபெற்றது. இரு அணிகளும் 3 டி-20, 5 ஒரு நாள் மற்றும் ஒரு டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் விளையாடின. முதலில் நடந்த டி-20 தொடரை ஆப்கானிஸ்தான் அணி வென்றது. அடுத்து நடந்த ஒரு நாள் தொடர் 2-2 என்ற கணக்கில் சமனில் முடிந்தது.

Afghanistan Test Victory
முதல் டெஸ்ட் வெற்றியை பதிவு செய்த மகிழ்ச்சியில் ஆப்கானிஸ்தான் அணி. (ACB)

கடைசியாக, ஆப்கானிஸ்தான் - அயர்லாந்து அணிகள் இடையிலான டெஸ்ட் போட்டி டேராடூனில் நடைபெற்றது. இந்த போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி, முதல் டெஸ்ட் வெற்றியை பதிவு செய்தது.

ஆப்கானிஸ்தான் அணி தனது 2-வது டெஸ்டிலேயே முதல் வெற்றியை ருசித்துள்ளது. ஆஸ்திரேலியாவைத் தவிர வேறு எந்த அணியும் அறிமுக டெஸ்டிலேயே வெற்றி பெற்றதில்லை.

Afghanistan Test Victory, ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி
டெஸ்ட் கோப்பை உடன் ஆப்கானிஸ்தான் அணி. (ACB)

வெற்றிக்கு பிறகு ரஷித் கான் பேசுகையில், “எங்களது வீரர்களிடம் தகுதியும், திறமையும் உள்ளது. ஆசிய கோப்பையில் எப்படி விளையாடினோம் என அனைவருக்கு தெரியும். உலகக்கோப்பை போன்ற பெரிய தொடரில் கூட எங்களால் சாதிக்க முடியும். எந்த அணியைப்பார்த்தும் நாங்கள் பயப்படவில்லை” என்று கூறினார்.

2019 ஐ.பி.எல் லீக் சுற்றின் முழு அட்டவணை வெளியானது!

2019 ஐ.பி.எல் தொடரில் அசத்த இருக்கும் 5 அறிமுக வீரர்கள்!

Also Watch...

First published:

Tags: Afghanistan, Cricket, Rashid Khan