முகப்பு /செய்தி /விளையாட்டு / ஹனுமா விஹாரி, ஷுப்மன் கில்லை தூக்கிட்டு இந்த ரெண்டு பேரை கொண்டு வாங்க: முன்னாள் வீரர் பரிந்துரை

ஹனுமா விஹாரி, ஷுப்மன் கில்லை தூக்கிட்டு இந்த ரெண்டு பேரை கொண்டு வாங்க: முன்னாள் வீரர் பரிந்துரை

ஷப்மன் கில்

ஷப்மன் கில்

ஹனுமா விஹாரி, ஷுப்மன் கில், ஷர்துல் தாக்கூருக்கு நிறைய வாய்ப்புகள் வழங்கி விட்டோம், இனி அவர்களுக்குப் பதிலாக வேறு வீரர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்று முன்னாள் இந்திய இடது கை வேகப்பந்து வீச்சாளர் கர்சான் காவ்ரி தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்கவும் ...
  • 1-MIN READ
  • Last Updated :

ஹனுமா விஹாரி, ஷுப்மன் கில், ஷர்துல் தாக்கூருக்கு நிறைய வாய்ப்புகள் வழங்கி விட்டோம், இனி அவர்களுக்குப் பதிலாக வேறு வீரர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்று முன்னாள் இந்திய இடது கை வேகப்பந்து வீச்சாளர் கர்சான் காவ்ரி தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான 5வது டெஸ்ட் போட்டியில் ஹனுமா விஹாரி, ஷுப்மன் கில், ஷர்துல் தாக்கூர் மூவரும் 2 இன்னிங்ஸ்களிலும் சொதப்பினர், ஆகவே இனியும் அவர்களுக்கு வாய்ப்பு வழங்குவது அவர்கள் உள்நாட்டு கிரிக்கெட்டில் நிரூபித்த பிறகாக இருக்க வேண்டும் என்று ஏற்கெனவே பலரும் கருத்து தெரிவித்துள்ள நிலையில் கர்சான் காவ்ரி இப்போது இந்த மூவரையும் அணியை விட்டு தூக்க வேண்டும் என்கிறார்.

இவர்களுக்குப் பதிலாக தன் வாழ்நாளின் உச்சபட்ச பார்மில் இருக்கும் மும்பை வீரர் சர்பராஸ் கான் மற்றும் சூரிய குமார் யாதவ் ஆகியோரை டெஸ்ட் அணியில் எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார் கர்சான் காவ்ரி.

கர்சான் காவ்ரி ஸ்போர்ட்ஸ் கீடா தளத்தில் இது தொடர்பாகக் கூறியதாவது:

ஹனுமா விஹாரி, ஷர்துல் தாக்கூருக்கு நிறைய வாய்ப்புகள் வழங்கப்பட்டு விட்டன, ஷுப்மன் கில் எதிர்கால வீரராக இருக்கலாம், ஆனால் இவரிடம் சீராக ரன்கள் எடுக்கும் தன்மையில்லை, எப்போதாவது ரன் எடுக்கிறார்.

எனவே இவர்களுக்குப் பதில் சூர்யகுமார் யாதவ், சர்பராஸ் கான் ஆகியோரை இவர்களுக்குப் பதிலாக டெஸ்ட் அணியில் சேர்க்க வேண்டும். இவர்கள்தான் இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டின் எதிர்கால நட்சத்திரங்கள். நம் அடுத்த டெஸ்ட் தொடர் வங்கதேசத்துக்கு எதிராக நவம்பரில் நடைபெறுகிறது.

வங்கதேசம்தானே என்று தள்ளி விட்டு விட வேண்டாம், அவர்கள் திடீரென பெரிய ஆட்டத்தை ஆடக்கூடியவர்கள். அவர்களுக்கு எதிராக நாம் வலுவான அணியையே எடுத்துச் செல்ல வேண்டும்.

இவ்வாறு கூறினார் கர்சான் காவ்ரி.

First published:

Tags: Shubman Gill, Test cricket