முகப்பு /செய்தி /விளையாட்டு / கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பயிற்சியாளர் மெக்கல்லம் விரைவில் விலகல்?

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பயிற்சியாளர் மெக்கல்லம் விரைவில் விலகல்?

பிரெண்டன் மெக்கல்லம்

பிரெண்டன் மெக்கல்லம்

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டனும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பயிற்சியாளருமான பிரண்டன் மெக்கல்லம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இருந்து ஐபில் தொடர் முடியாமலேயே விலக உள்ளதாக கூறப்படுகிறது.

இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக அவர் நியமிக்கப்பட உள்ளார்.இங்கிலாந்து உள்நாட்டு ஊடகங்கள் இது தொடர்பாக மெக்கல்லமுடன் முதல் சுற்று நேர்காணல் முடிந்து விட்டதாகவும் இங்கிலாந்து டெஸ்ட் அணியின் பயிற்சியாளராக மெக்கல்லம் நியமிக்கப்படவுள்ளதாகவும் செய்திகள் வெளியிட்டு வருகின்றன.

முன்பு ஒருநாள், டி20 அணிக்கு மெக்கல்லமும், டெஸ்ட் அணிக்கு கேரி கர்ஸ்டன் என்று பேசப்பட்டது, ஆனால் இப்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் நடைபெறுகிறது, மேலும் உலக டெஸ்ட் சாம்பியன்களான நியூசிலாந்துக்கு எதிராக ஜூன் தொடக்கத்திலேயே டெஸ்ட் ஆரம்பிப்பதால் மெக்கல்லம் சேவை நாட்டுக்குத் தேவை என்று இங்கிலாந்து முடிவெடுத்துள்ளது.

மெக்கல்லத்தின் பயிற்சி அனுபவம் குறைந்த ஓவர்கள் ஆட்டத்தில் தனித்துவமாக இருந்துள்ளது, டெஸ்ட் அணியின் பயிற்சியில் இவருக்கு அனுபவம் இல்லை, கவுண்டி அணியையும் இவர் பயிற்சி செய்ததில்லை. ஆனால் ஒரு கேப்டனாக, 2012 முதல் 2016 வரை பயிற்சியாளர் மைக் ஹெசனுடன் இணைந்து நியூசிலாந்தின் டெஸ்ட் கிரிக்கெட் மறுமலர்ச்சியை உருவாக்கிய தலைமைக் குழுவின் முக்கிய அங்கமாக இருந்தார் மெக்கல்லம்.

கொல்கத்தா அணிக்கும் பிரெண்டன் மெக்கலத்துக்கு இடையிலான உறவு மிகவும் நீண்டது. ஐபிஎல் தொடங்கியது அந்த அணியின் ஒரு அங்கமாக இருந்தார். ஐபில் போட்டி தொடங்கியதும் முதல் போட்டியில் கொல்கத்தா அணிக்காக களமிறங்கிய அவர், 158 ரன்கள் விளாசி அனைவரையும் வியக்க வைத்தார். மேலும், கரீபியன் பிரீமியர் லீக்கில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடிய மெக்கலாம், பயிற்சியாளராகவும் இருந்துள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து அணி ஒரு வெற்றி கூட பெறாமல் 4-0 என்ற கணக்கில் படுதோல்வி அடைந்தது. வெஸ்ட் இண்டீசுடன் ஜோ ரூட் தலைமையில் இங்கிலாந்து அங்கும் டெஸ்ட் தொடரை இழந்தது, எனவே வாங்கியது போதும் என்று ரூட் விலகிவிட்டார்.

பென் ஸ்டோக்ஸ் போன்ற அதிரடி வீரர் கேப்டனாக இருக்கும் போது மெக்கல்லம் போன்ற அவரை விடவும் கொலைகார பேட்டிங் செய்யும் ஒரு முன்னாள் கேப்டன் தானே பயிற்சி செய்வது பெரிய பலன்களை அளிக்கும் என்று இங்கிலாந்து முடிவு செய்துள்ளது.

எனவே ஐபிஎல் தொடரிலிருந்து மெக்கல்லம் விடுவிக்கப்படலாம் என்று தெரிகிறது.

First published:

Tags: Brendon McCullum, IPL 2022, KKR