தோனி களத்திற்கு வந்தாலே எதிரணியினருக்கு பிரச்னை தான் - நியூசிலாந்து கிரிக்கெட் வீரர்

எந்த மாதிரி சூழ்நிலையாக இருந்தாலும் அதை எப்படி சமாளிக்க வேண்டும் என்பது தோனிக்கு தெரியும் என்று இங்கிலாந்து வீரர் கெவின் பீட்டர்சன் கூறியுள்ளார்

தோனி களத்திற்கு வந்தாலே எதிரணியினருக்கு பிரச்னை தான் - நியூசிலாந்து கிரிக்கெட் வீரர்
சாதனைக்கே பிடித்த சாதனையாளனாக தனது 37 வது வயதிலும் களமாடி வருகிறார் தோனி
  • News18
  • Last Updated: May 20, 2019, 2:00 PM IST
  • Share this:
தோனி களத்திற்கு வந்தாலே எதிரணியினருக்கு பிரச்னை தான் என்று நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் பிரண்டன் மெக்கல்லம் கூறியுள்ளார்.

உலகக்கோப்பை தொடர் வருகிற 30-ம் தேதி தொடங்குகிறது. இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்க அணிகள் மோதும் முதல் போட்டி லண்டனில் நடைபெறுகிறது. ஜூன் மாதம் 6-ம் தேதி இந்திய அணி தனது முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணியுடன் மோதுகிறது. உலகக்கோப்பை தொடருக்காக அனைத்து அணி வீரர்களும் தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்திய அணி வீரர் தோனி குறித்து பிரண்டன் மெக்கல்லம் மற்றும் கெவின் பீட்டர்சன் ஆகியோர் பேசியுள்ளனர்.

தோனி பற்றி மெக்கல்லம், ‘இந்திய அணிக்கு விலைமதிப்பற்றவர் தோனி. ஒரு போட்டியை எதிர்கொள்ளும் போது அவர் மனதில் ஒரு ப்ளூப்ரின்ட்டை வைத்திருப்பார். அவர் களத்திற்கு வரும் போது எதிரணியினருக்கு பதட்டத்தை ஏற்படுத்திவிடுவார்’ என்று கூறியுள்ளார்.


மேலும் சமீபகாலமாக அவரது பேட்டிங் சிறப்பாக உள்ளது. இந்த ஐபிஎல் தொடரில் அவர் சிறப்பாக செயல்பட்டுள்ளார். அது உலகக்கோப்பை தொடருக்கு உதவியாக இருக்கும் என்று மெக்கல்லம் கூறியுள்ளார்.

இதே போல் இங்கிலாந்து வீரர் கெவின் பீட்டர்சன், ‘தோனியின் அமைதி போட்டியின் போது தனக்கு முன் இருக்கும் சவால்களை எதிர்கொள்ள அவருக்கு உதவுகிறது. எந்த மாதிரி சூழ்நிலையாக இருந்தாலும் அதை எப்படி சமாளிக்க வேண்டும் என்பது தோனிக்கு தெரியும்’ என்றும் கூறியுள்ளார்.

தோனியை தீவிரவாதி என்று தான் அழைப்போம் - சொன்னது யார்?

Also watch

First published: May 20, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading