Home /News /sports /

இந்தியத் ‘தொழிலதிபரால்’ சீரழிந்த ஜிம்பாப்வே வீரர் பிரெண்டன் டெய்லருக்கு மூன்றரை ஆண்டுகள் தடை

இந்தியத் ‘தொழிலதிபரால்’ சீரழிந்த ஜிம்பாப்வே வீரர் பிரெண்டன் டெய்லருக்கு மூன்றரை ஆண்டுகள் தடை

பிரெண்டன் டெய்லர் வாழ்க்கையை நாசமாக்கிய இந்தியத் தொழிலதிபர்

பிரெண்டன் டெய்லர் வாழ்க்கையை நாசமாக்கிய இந்தியத் தொழிலதிபர்

ஜிம்பாப்வேயின் முன்னாள் கேப்டன் பிரெண்டன் டெய்லருக்கு ஐசிசியின் ஊழல் தடுப்புப் பிரிவு அனைத்து கிரிக்கெட்டிலும் இருந்து மூன்றரை ஆண்டுகள் தடை விதித்துள்ளது.

  ஜிம்பாப்வேயின் முன்னாள் கேப்டன் பிரெண்டன் டெய்லருக்கு ஐசிசியின் ஊழல் தடுப்புப் பிரிவு அனைத்து கிரிக்கெட்டிலும் இருந்து மூன்றரை ஆண்டுகள் தடை விதித்துள்ளது.

  ஜனவரி 28 முதல் டெய்லர் தடையை ஏற்றுக்கொண்டதாக ஐசிசி கூறியது. ஊக்கமருந்து தடையை மீறியதாக இன்னொரு குற்றச்சாட்டை டெய்லர் ஏற்றுக்கொண்டார் - கடந்த ஆண்டு தனது கடைசி சர்வதேச ஆட்டத்தில் அவர் ஊக்க மருந்து சோதனையில் கொகெயின் எடுத்துக் கொண்டது. உறுதியானது.

  வார இறுதியில் வெளியானஐசிசி அறிக்கையில் டெய்லர் தன் ட்விட்டரில் அவர் தன் சூதாட்டக்காரருடனான தொடர்பை புகாரளிக்கத் தாமதித்தது பற்றிக் குறிப்பிட்டிருந்தார். ஐசிசி 'மிஸ்டர் எஸ்' என்று குறிப்பிடும் தொழிலதிபர்களுடன் இந்தியாவில் நடந்த சந்திப்பின் போது கொகெயின் பயன்படுத்தி படம்பிடிக்கப்பட்டதை டெய்லர் வெளிப்படுத்தினார், அந்தத் தொழிலதிப அந்த வீடியோவைப் பயன்படுத்தி டெய்லரை ஸ்பாட் ஃபிக்ஸ் செய்யுமாறு மரட்டினார்.

  ஐசிசியின் நேர்மைப் பிரிவின் தலைவரான அலெக்ஸ் மார்ஷல் கூறினார்: “அவரது அனுபவமுள்ள ஒரு வீரர் அந்தக் கடமைகளை நிறைவேற்றாமல் இருப்பது ஏமாற்றமளிக்கிறது, இருப்பினும் அவர் அனைத்து குற்றச்சாட்டுகளையும் ஏற்றுக்கொண்டார்,

  எந்தவொரு ஊழல் நடவடிக்கையும் முடிந்தவரை சீக்கிரம் ரிப்போர்ட் செய்தால் அதை ஒழித்து விடலாம். அதனால் விரைவில் அணுகல்களைப் புகாரளிக்குமாறு மற்ற வீரர்களுக்கு பிரெண்டனின் செய்தியை நான் எதிரொலிக்கிறேன். பிரெண்டனின் மறுவாழ்வுக்காக நல்வாழ்த்துக்கள்.

  டெய்லர் நான்கு அம்சங்களில் ஐசிசி ஊழல் தடுப்பு விதிகளை மீறியதாகக் ஐசிசி கூறுகிறது. இதில் தன்னை அணுகியதை வெளிப்படுத்தத் தவறியது உட்பட, குற்றம் சாட்டப்பட்ட ஊழல்வாதிகளிடமிருந்து விருந்தோம்பல் உட்பட பரிசுகள் மற்றும் ரொக்கத்தைப் பெற்றது.

  ஸ்பாட் ஃபிக்ஸிற்கான அணுகுமுறைகளில் ஒன்று, ஜிம்பாப்வேயின் இலங்கை மற்றும் வங்காளதேச சுற்றுப்பயணங்களுக்காக மேற்கொள்ளப்பட்டது.

  டெய்லர் சிக்கவைக்கப்பட்டது எப்படி?

  ஜிம்பாப்வே கிரிக்கெட் நட்சத்திரம் பிரெண்டன் டெய்லர், அவரை ஸ்பாட் ஃபிக்ஸ் சூதாட்டத்தில் சிக்க வைக்க கொகெய்ன் போதை மருந்து பயன்படுத்திய வீடியோவைக் கொண்டு இந்திய தொழிலதிபர் ஒருவர் தன்னை பிளாக்மெயில் செய்தார் என்று அதிர்ச்சியூட்டும் தகவலை வெளியிட்டார்.

  இது தொடர்பாக டெய்லர் தன் ட்விட்டரில் கூறிய போது, “

  அக்டோபர் 2019 இன் பிற்பகுதியில், ஸ்பான்சர்ஷிப்கள் மற்றும் ஜிம்பாப்வேயில் T20 போட்டியை நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து விவாதிக்க ஒரு இந்திய தொழிலதிபர் என்னை அணுகினார், மேலும் பயணத்தை மேற்கொள்ள எனக்கு USD$15,000 வழங்கப்படும் என்று அறிவுறுத்தினார்.

  நான் கொஞ்சம் எச்சரிக்கையாக இருந்ததை மறுக்க முடியாது. ஆனால், ஜிம்பாப்வே கிரிக்கெட்டால் 6 மாதங்களாக எங்களுக்கு ஊதியம் வழங்கப்படாததால், ஜிம்பாப்வேயால் சர்வதேச அரங்கில் தொடர்ந்து விளையாட முடியுமா என்பது கேள்விக்குறியாக இருந்தது. அதனால் நான் பயணம் செய்தேன்.

  அவர் சொன்னது போலவே விவாதங்கள் நடந்தன, எங்கள் கடைசி இரவில் ஹோட்டலில், தொழிலதிபரும் அவரது சகாக்களும் என்னை ஒரு கொண்டாட்ட விருந்துக்கு அழைத்துச் சென்றனர். நாங்கள் பானங்கள் அருந்தினோம், மாலையின் போது அவர்கள் வெளிப்படையாக எனக்கு கொகெயின் வழங்கினர், அவர்களும் அதைப் பயன்படுத்தினார்கள். நான் முட்டாள்தனமாக தூண்டிலில் விழுந்தேன். என்னை வைத்து அவர்கள் விளையாடியதை நினைக்கும் போது இன்றும் என் வயிறு கலங்குகிறது.

  மறுநாள் காலை, அதே ஆட்கள் எனது ஹோட்டல் அறைக்குள் நுழைந்து, கொகெயின் சாப்பிட்ட அந்த இரவு எடுத்த வீடியோவை என்னிடம் காட்டி, அவர்களுக்கான சர்வதேச போட்டிகளில் நான் ஸ்பாட் ஃபிக்ஸ் செய்யவில்லை என்றால், அந்த வீடியோவை பொதுமக்களுக்கு வெளியிடுவோம் என்று மிரட்டினார்கள்.

  அவர்கள் 6 பேர் இருந்தனர், நான் என் பாதுகாப்பு குறித்து அச்சம் கொண்டேன். பயத்தினால் என் வாழ்க்கையையே மாற்றிய அந்தச் சூழ்நிலையின் கைதியானேன். எனக்கு 15,000 டாலர்கள் கொடுத்தனர். அது டெபாசிட்தானாம், நான் சூதாட்டத்தில் ஈடுபட்டு அவர்கள் சொல்படி நடந்தால் மேலும் 20,000 டாலர்கள் தருவதாகக் கூறினர். அப்போது எனக்கு வேறு வழியில்லை, அவர்களிடம் மறுக்க முடியவில்லை. நான் இங்கிருந்து எப்படியாவது எஸ்கேப் ஆகவேண்டும் என்று ஒப்புக் கொண்டேன்.

  நான் எந்த விதமான மேட்ச் பிக்சிங்கிலும் ஈடுபட்டதில்லை என்பதை பதிவு செய்ய விரும்புகிறேன். நான் தவறுகள் செய்திருக்கலாம் ஆனால் நான் ஏமாற்றுபவன் அல்ல. அழகான கிரிக்கெட் விளையாட்டின் மீதான எனது நேசம் என் வழியில் வீசப்படும் எந்த அச்சுறுத்தல்களையும் விட அதிகமாக உள்ளது," என்று அவர் தனது அறிக்கையில் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

   
  Published by:Muthukumar
  First published:

  Tags: Anti-corruption bureau, ICC, Zimbabwe

  அடுத்த செய்தி