வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடர் : அஸ்வின், ராகுல் தேர்வு; கோலி, பும்ரா, உம்ரன் மாலிக் இல்லை
வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடர் : அஸ்வின், ராகுல் தேர்வு; கோலி, பும்ரா, உம்ரன் மாலிக் இல்லை
விராட் கோலி ட்ராப்.
மேற்கிந்திய தீவுகள் பயணம் மேற்கொள்ளும் இந்திய வெள்ளைப்பந்து அணிகள் அறிவிக்கப்பட்டதில் அன்று ஒருநாள் போட்டிகளுக்கு ஷிகர் தவான் கேப்டனாக நியமிக்கப்பட்டார், இன்று அறிவிக்கப்பட்ட 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் அணிக்கு ரோஹித் சர்மா அணிக்குக் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். முழு அணி விவரம் இதோ:

கே.எல்.ராகுல், குல்தீப் யாதவ் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன, ஆனால் உடல் தகுதியைப் பொறுத்து பிற்பாடு உறுதி செய்யப்படும் என்று தெரிகிறது, ஆனால் விராட் கோலி ட்ராப் செய்யப்பட்டுள்ளார், ஜஸ்பிரித் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
மே.இ.தீவுகளுக்கு எதிராக டி20 தொடர் ஒருநாள் தொடர் முடிந்த கையோடு ஜூலை 29ம் தேதி தொடங்குகிறது.
நிச்சயம் உம்ரன் மாலிக் போன்ற இளம் வீரர் வருந்தவே செய்வார், அதே போல் ராகுல் திவேத்தியா போன்ற நல்ல பினிஷர்களுமே வருந்தவே செய்வார்கள். ராகுல் திவேத்தியாவுக்கு இந்த அணியில் ஒரு வாய்ப்பு கொடுத்திருக்கலாம், ரவி பிஷ்னாய்க்குப் பதில் ஒரு வாய்ப்பு கொடுத்துப் பார்த்திருக்கலாம்.
உடல் தகுதி பொறுத்து என்று குல்தீப் யாதவ்வை சந்தேகமாக தேர்வு செய்வதற்குப் பதில் ராகுல் திவேத்தியாவுக்கு வாய்ப்பு கொடுத்துப் பார்த்திருக்கலாம். அதே போல் உம்ரன் மாலிக்கும் பாவம்!
வெஸ்ட் இண்டீஸ் டூர் அட்டவணை:
ஜூலை 22, 24, 27, மூன்று ஒருநாள் போட்டிகளும் போர்ட் ஆஃப் ஸ்பெயினில்.
பிறகு டி20 போட்டிகள், ஜூலை 29, பிறகு ஆகஸ்ட் 1, 2, 6,7 ஆகிய தேதிகளில் நடைபெறுகின்றன.
Published by:Muthukumar
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.