மோடியின் ‘குஜராத் மாடல்’ போல் கெஜ்ரிவாலின் டெல்லி மாடல்: குஜராத் உள்ளாட்சித் தேர்தல் ‘சக்சஸ்’ குறித்து ஆம் ஆத்மி பெருமிதம்

மோடியின் ‘குஜராத் மாடல்’ போல் கெஜ்ரிவாலின் டெல்லி மாடல்: குஜராத் உள்ளாட்சித் தேர்தல் ‘சக்சஸ்’ குறித்து ஆம் ஆத்மி பெருமிதம்

அரவிந்த் கெஜ்ரிவால்

சூரத் முனிசிபல் கார்ப்பரேஷனில் மொத்தம் 120 தொகுதிகளில் 107 இடங்களுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன, இதில் பாஜக 84-லிலும் ஆம் ஆத்மி 23-லும் வென்றுள்ளன. 

  • Share this:
    பாஜக கோட்டையான குஜராத்தின் உள்ளாட்சித் தேர்தலில் சில இடங்களை ஆம் ஆத்மி வென்றதையடுத்து மோடியின் குஜராத் மாடல் என்பது போல் கெஜ்ரிவாலின் டெல்லி மாடல் கைகொடுத்ததாக ஆம் ஆத்மி கொண்டாடி வருகிறது.

    2014-ல் நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமராவதற்கு குஜராத் மாடல் என்ற பிரச்சாரம் பெரிய அளவுக்குக் கைகொடுத்தது, அது போலவே தற்போது ஆம் ஆத்மி கட்சி கெஜ்ரிவாலின் டெல்லி மாடல் என்பதை முன்னெடுத்து வருகின்றனர்.

    குஜராத் உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதில் ஆம் ஆத்மி சூரத் முனிசிபல் கார்ப்பரேஷனில் 8 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. இதனை பாஜக கோட்டையை அசைத்துள்ளோம் என்ற ரீதியில் ஆம் ஆத்மி கொண்டாடி வருகிறது.

    கடைசியாக கிடைத்த தகவல்களின் படி சூரத் முனிசிபல் கார்ப்பரேஷனில் மொத்தம் 120 தொகுதிகளில் 107 இடங்களுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன, இதில் பாஜக 84-லிலும் ஆம் ஆத்மி 23-லும் வென்றுள்ளன.

    அகமதாபாத்தில் 67 இடங்களில் 57-ஐ பாஜக கைப்பற்றியுள்ளது. ராஜ்கோட்டில் 55 இடங்களில் 51 இடங்களைக் கைப்பற்றியுள்ளது பாஜக.

    மேலும் குஜராத் முழுதும் ஆங்காங்கே பல இடங்களில் ஆம் ஆத்மி முன்னிலை வகிப்பதாகவும் ஆம் ஆத்மி கட்சி தன் ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளது. அதே ட்விட்டர் பக்கத்தில், “கெஜ்ரிவாலின் டெல்லி மாடல்” பயனளிக்கிறது என்று பெருமிதமாகக் கூறியுள்ளது.

    ஆம் ஆத்மி கட்சி டெல்லியில் பல தடைகளுக்கு இடையே மக்கள் நல ஆட்சியை நடத்தி வருவதாக எடுத்த நற்பெயர்களை அடுத்து நாட்டின் பிற மாநிலங்களிலும் காலூன்றி வருகிறது.

    சமீபத்திய கோவா, காஷ்மீர் உள்ளாட்சி தேர்தலிலும் ஆம் ஆத்மி சில வெற்றிகளை ஈட்டி கொஞ்சம் பாஜகவுக்கு ஆட்டம் காட்டி வருகிறது.

    இதனையடுத்து குஜராத்தின் உள்ளாட்சித் தேர்தலில் அனைத்து இடங்களிலும் ஆம் ஆத்மி போட்டியிடுகிறது. அந்தந்த மாநிலங்களில் இதற்கென்றே பிரத்யேக தலைவர்களை ஆம் ஆத்மி நியமித்து வருகிறது. ஆதிஷி என்பவர் குஜராத்தில் தலைமையேற்றுள்ளார்.

    உ.பி. உத்தரகண்ட், கோவா,பஞ்சாப், இமாச்சலம் மற்றும் குஜராத் ஆகிய மாநில தேர்தல்களிலும் ஆம் ஆத்மி போட்டியிட இருப்பதாக அறிவித்துள்ளது.

    குஜராத் மாடல் போல் இனி டெல்லி மாடல் பேச்சுகளை கேட்கலாம்.
    Published by:Muthukumar
    First published: