ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

வெற்றிக்காக விதிமீறிய செயலில் ஈடுபட்ட பாகிஸ்தான்.. ஆதாரத்துடன் சிக்க வைத்த முன்னாள் வீரர்

வெற்றிக்காக விதிமீறிய செயலில் ஈடுபட்ட பாகிஸ்தான்.. ஆதாரத்துடன் சிக்க வைத்த முன்னாள் வீரர்

வெற்றிக்காக விதிமீறிய செயலில் ஈடுபட்ட பாகிஸ்தான்.

வெற்றிக்காக விதிமீறிய செயலில் ஈடுபட்ட பாகிஸ்தான்.

T20 World Cup | ஐசிசி டி20 உலகக் கோப்பையில் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் வீதிமிறிய செயலலில் ஈடுபட்டது தற்போது தெரிய வந்துள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  டி20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 12 சுற்றில் பாகிஸ்தான் - ஜிம்பாப்வே அணிகள் நேற்று மோதின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 130 ரன்கள் எடுத்தது. இதையடுத்து விளையாடிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 129 ரன்கள் மட்டுமே எடுத்தது.

  கடைசி ஓவர் வரை பரபரப்பாக சென்ற இந்த போட்டியில் பாகிஸ்தான் ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தனர். சூப்பர் 12 சுற்றில் பாகிஸ்தான் முதல் 2 போட்டிகளில் தோல்வியடைந்துள்ள நிலையில் பல்வேறு விமர்சனங்களை சந்தித்து வருகிறது.

  Also Read : பயிற்சி மைதானம் தூரம்.. உணவுக்கூட சரியில்லை - இந்திய வீரர்கள் அதிருப்தி

  இந்நிலையில் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியின் பாகிஸ்தான் வீரர் வசீம் ஐசிசி விதிமுறையை மீறி செயல்பட்டுள்ளார். அதாவது பாகிஸ்தான் அணிக்கு கடைசி பந்தில் 3 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இருந்தது. ஷாகீன் அஃப்ரிடி கடைசி பந்தை எதிர் கொண்ட நிலையில் ஜிம்பாப்வே பவுலர் பந்துவீசுவதற்கு முன்பே எதிர்முனையில் இருந்த வசீம் கீரிஸை விட்டு பாதி வெளியேறி விட்டார். ஐசிசி புதிய விதிகளின் படி இது தவறாகும்.

  இந்த புகைப்படத்தை ஆஸ்திரேலியா முன்னாள் வீரர் பிராட் ஹக் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் பேட்ஸ்மேன்கள் இப்படி செய்வது பெரும் குற்றம். இதனால் பந்துவீசும் அணிக்கு தான் ஆபத்து. இதனை தடுக்க ஐசிசி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

  Published by:Vijay R
  First published:

  Tags: Pakistan cricket, T20 World Cup