ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

கழுத்தைத் தாக்கிய பவுன்சர்- மே.இ.தீவுகள் வீரர் மருத்துவமனையில் அனுமதி

கழுத்தைத் தாக்கிய பவுன்சர்- மே.இ.தீவுகள் வீரர் மருத்துவமனையில் அனுமதி

ஆந்த்ரே பிளெட்சர்.

ஆந்த்ரே பிளெட்சர்.

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர் ஆண்ட்ரே பிளெட்சர் குல்னா டைகர்ஸ் அணிக்காக பங்களாதேஷ் பிரீமியர் லீக் 2022-ல் ஆடியபோது பேட்டிங் செய்யும் தருணத்தில் பவுன்சர் வீச்சால் அவரது கழுத்தில் தாக்கப்பட்டார். பிளெட்சர் வலியில் காணப்பட்டார் இதனையடுத்து ஸ்ட்ரெச்சரில் அவர் கொண்டு செல்லப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

மேலும் படிக்கவும் ...
 • Cricketnext
 • 1 minute read
 • Last Updated :

  வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர் ஆண்ட்ரே பிளெட்சர் குல்னா டைகர்ஸ் அணிக்காக பங்களாதேஷ் பிரீமியர் லீக் 2022-ல் ஆடியபோது பேட்டிங் செய்யும் தருணத்தில் பவுன்சர் வீச்சால் அவரது கழுத்தில் தாக்கப்பட்டார். பிளெட்சர் வலியில் காணப்பட்டார் இதனையடுத்து ஸ்ட்ரெச்சரில் அவர் கொண்டு செல்லப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

  ஏழாவது ஓவரில் எதிரணியின் பவுலர் ரெஜவுர் ரஹ்மான் ராஜா வீசிய முதல் பந்து பயங்கரமாக எகிறியது, அதற்கு பிளெட்சர் ஒரு புல் ஷாட்டை முயற்சித்தார், ஆனால் இறுதியில் அவரது கழுத்தில் அடி வாங்கினார். உடனே வலியால் துடித்தார். சட்டோகிராம் சேலஞ்சர்ஸ் வீரர்கள் அவரைச் சூழ்ந்து கவலையுடன் அவருக்கு உதவி புரிந்தனர்.

  பிளெட்சர் மைதானத்தில் கண்காணிப்பில் இருந்தபோது அவரது உடல்நிலை பரவாயில்லை என்று பங்களாதேஷ் கிரிக்கெட் வாரிய மருத்துவர் கூறினார். குல்னா மேலாளர் நஃபீஸ் இக்பால், 12 பந்துகளில் 16 ரன்களுடன் பேட்டிங் செய்து கொண்டிருந்த பிளெட்சர் நன்றாக இருக்கிறார் என்றும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் என்றும் பின்னர்தெரிவித்தார்.

  பிளெட்சர் நன்றாக இருக்கிறார். அவர் நனவுடன் தான் இருக்கிறார், உணர்வுப்பாதிப்பு எதுவும் இல்லை. , எந்த பிரச்சனையும் உணரவில்லை. ஆனால் அவர் கழுத்தில் அடிபட்டதால், எந்த ரிஸ்க்கும் எடுக்காமல் எச்சரிக்கையாக இருக்கிறோம். ஸ்கேன் செய்ய மருத்துவர் பரிந்துரைத்தால் அது மேற்கொள்ளப்படும். இப்போதைக்கு அவர் பரவாயில்லை என்றார் பங்களாதேஷ் கிரிக்கெட் மருத்துவர்.

  ஆந்த்ரே பிளெட்சருக்கு மூளை அதிர்ச்சி ஏற்பட்டிருக்கலாம் என்பதால் அவருக்கு பதிலாக ஜிம்பாப்வே வீரர் சிகந்தர் ரசா இறக்கப்பட்டுள்ளார். டாக்காவில் உள்ள ஷேர் பங்களா தேசிய மைதானத்தில் சேலஞ்சர்ஸ் அணிக்கு எதிராக புலிகள் 191 ரன்களை துரத்திக் கொண்டிருந்தனர். சேலஞ்சர்ஸ் அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

  Published by:Muthukumar
  First published:

  Tags: Cricket, T20