Home /News /sports /

Video: 50 பந்துகளில் சதம் விளாசி டி வில்லியர்ஸ் மிரட்டல்!

Video: 50 பந்துகளில் சதம் விளாசி டி வில்லியர்ஸ் மிரட்டல்!

சதம் விளாசிய ஏபி டி வில்லியர்ஸ். (BPL)

சதம் விளாசிய ஏபி டி வில்லியர்ஸ். (BPL)

#ABDeVilliers smashes a Century in Fifty Balls | டி வில்லியர்ஸ் வானவேடிக்கை காட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. #ABD #BPL2019

  • News18
  • Last Updated :
    வங்கதேச பிரீமியர் லீக் டி-20 போட்டியில் தென்னாப்ரிக்காவைச் சேர்ந்த அதிரடி மன்னன் ஏபி டி வில்லியர்ஸ் 50 பந்துகளில் சதம் விளாசி மிரட்டியுள்ளார்.

    இந்தியாவில் நடத்தப்படும் ஐ.பி.எல் போட்டியைப்போல், வெளிநாட்டு வீரர்கள் விளையாடும் டி-20 லீக் தொடர் வங்கதேசத்தில் நடைபெற்று வருகிறது. நேற்று (ஜன.28) நடந்த 34-வது போட்டியில் டாக்கா டைனமைட்ஸ் , ரங்க்பூர் ரைடர்ஸ் அணிகள் மோதின.

    முதலில் பேட்டிங் செய்த டாக்கா டைனமைட்ஸ் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 186 ரன்கள் குவித்தது. 187 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ரங்க்பூர் ரைடர்ஸ் அணிக்கு, கிறிஸ் கெய்ல் 1 ரன்னிலும், ரிலே ரோஸ்ஸவ் ரன் ஏதும் எடுக்காமலும் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தனர்.

    பின்னர் வந்த ‘மிஸ்டர் 360 டிகிரி’ ஏபி டி வில்லியர்ஸ், அலெக்ஸ் ஹேல்ஸ் உடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் எதிரணியின் பந்துவீச்சை அடித்து துவம்சம் செய்தனர். குறிப்பாக, டி வில்லியர்ஸ் ருத்ரதாண்டவம் ஆடினார். 50 பந்துகளை மட்டும் எதிர்கொண்ட டி வில்லியர்ஸ் 6 சிக்சர்கள், 8 பவுண்டரிகளின் உதவியுடன் சதம் விளாசினார்.



    18.2 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து ரங்க்பூர் ரைடர்ஸ் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டி வில்லியர்ஸ் வானவேடிக்கை காட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.



    #ICCT20WorldCup2020: முழு அட்டவணை - இந்தியாவின் முதல் போட்டி யாருடன்?

    Also Watch...

    Published by:Murugesan L
    First published:

    Tags: AB de Villiers, Cricket Records

    அடுத்த செய்தி