நியூசிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட தொடரில் இரண்டாவது டெஸ்ட் போட்டியை 247 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வென்று தொடரை கைப்பற்றியது.
நியூசிலாந்து கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து ஆடி வருகிறது. பெர்த் நகரில் பகலிரவாக நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் 296 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை ஆஸ்திரேலியா பந்தாடியது. அதைத் தொடர்ந்து "பாக்சிங் டே" டெஸ்ட் எனப்படும் கிறிஸ்துமஸை தொடர்ந்து நடத்தப்படும் டெஸ்ட் போட்டி கடந்த 26ம் தேதி மெல்பர்ன் நகரில் தொடங்கியது.
பகலிரவாக நடந்த இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன், ஆஸ்திரேலியாவை பேட்டிங் செய்யப் பணித்தார். விறுவிறுவென ரன் சேர்த்த ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 467 ரன்களை குவித்தது. அதையடுத்து விளையாடிய நியூசிலாந்து வீரர்கள் 148 ரன்களுக்கு நடையைக் கட்டியதால் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 319 ரன்கள் முன்னிலை பெற்றது.
பின்னர் 2வது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா 5 விக்கெட்டுகளை இழந்து 168 ரன்கள் எடுத்திருந்தபோது டிக்ளேர் செய்தது. 488 ரன் இலக்கை நோக்கி ஆடத் தொடங்கிய நியூசிலாந்து அணி விக்கெட்டுகளை பேட்டின்சனும், சுழற்பந்துவீச்சாளர் நேத்தன் லயனும் போட்டி போட்டு வீழ்த்தினர்.
போட்டி முடிய ஒரு நாள் இருந்த நிலையில், துவக்க வீரர் டாம் பிளண்டெல் மட்டும் சிறப்பாக ஆடி சதம் கண்டார். மற்றவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். கடைசியில் அணி 240 ரன்கள் எடுத்திருந்தபோது பிளண்டெல் வீழந்தார். அவரது ஸ்கோர் 121. அத்துடன் நியூசிலாந்தின் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது. ஆட்ட நாயகனாக ஆஸ்திரேய அனியின் டிரேவிஸ் ஹெட் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஆஸ்திரேலியா 2-க்கு பூஜ்ஜியம் என முந்தியுள்ள நிலையில் 3வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஜனவரி 3ம் தேதி தொடங்குகிறது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.