• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • IND vs AUS | 195 ரன்களுக்கு சுருண்ட ஆஸ்திரேலியா... தடுமாற்றத்துடன் ஆரம்பித்த இந்தியா

IND vs AUS | 195 ரன்களுக்கு சுருண்ட ஆஸ்திரேலியா... தடுமாற்றத்துடன் ஆரம்பித்த இந்தியா

India vs Australia

India vs Australia

India vs Australia | ஆஸ்திரேலிய அணி சார்பில் மார்னஸ் லாபுசாக்னே அதிகபட்சமாக 48 ரன்கள் சேர்த்தார்.

  • Share this:
    இந்திய அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 195 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. வேகப்பந்து வீச்சாளர் பும்ரா 4 விக்கெட்களையும், ரவிசந்திரன் அஸ்வின் 3 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

    ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி விளையாடி வருகிறது. அடிலெய்ட் மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்தது. இதையடுத்து இரு அணிகளும் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி இன்று மெல்போர்ன் மைதானத்தில் தொடங்கியது.

    இந்த டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதை தொடர்ந்து ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களாக மேத்யூவ் வேட், ஜோ பர்ன்ஸ் களமிறங்கினார்கள். ஜோ பர்ன்ஸ் ரன் ஏதும் எடுக்காமல் பும்ரா வேகத்தில் சிக்கினார்.

    மற்றொரு தொடக்க வீரர் மேத்யூவ் வேட் 30 ரன்னில் அஸ்வின் பந்துவீச்சில் அவுட்டானார். டெஸ்ட் போட்டியின் நெம்பர் 1 பேட்ஸ்மேன் ஸ்டீவன் ஸ்மித் இந்த முறையும் அஸ்வின் சுழல்பந்தில் ரன்ஏதும் எடுக்காமல் அவுட்டானார். இந்திய பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் ஆஸ்திரேலிய அணி 195 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

    ஆஸ்திரேலிய அணி சார்பில் மார்னஸ் லாபுசாக்னே அதிகபட்சமாக 48 ரன்கள் சேர்த்தார். இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா 4 விக்கெட்களையும், அஸ்வின் 3 விக்கெட்களையும் வீழ்த்தினார்.

    இதை தொடர்ந்து முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே தடுமாற்றமாக அமைந்தது. தொடக்க வீரர் மயங்க் அகர்வால் முதல் ஓவரிலேயே ஸ்டார்க் பந்துவீச்சில் ரன் ஏதும் எடுக்காமல் அவுட்டாகி வெளியேறினார். சுப்மன் கில் மற்றும் புஜாரா நிதானமாக விளையாடி வருகின்றனர்.



    உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: