• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • மே.இ.தீவுகளில் பிறந்து இந்தியாவுக்கு ஆடிய தமிழக ஆல்ரவுண்டர் ராபின் சிங்: இன்று பிறந்த நாள்

மே.இ.தீவுகளில் பிறந்து இந்தியாவுக்கு ஆடிய தமிழக ஆல்ரவுண்டர் ராபின் சிங்: இன்று பிறந்த நாள்

இன்று பிறந்தநாள் காணும் தமிழ்நாடு வீரரும் இந்திய ஆல்ரவுண்டருமான ராபின் சிங்.

இன்று பிறந்தநாள் காணும் தமிழ்நாடு வீரரும் இந்திய ஆல்ரவுண்டருமான ராபின் சிங்.

முன்னாள் இந்திய ஆல்ரவுண்டரும் பீல்டிங் பயிற்சியாளருமான ராபின் சிங் இன்று தன் 58வது பிறந்த தினத்தைக் கொண்டாடுகிறார்.

  • Share this:
    ரொபீந்தர ராம்நரைன் ‘ராபின் சிங்’ என்று இன்று தன் 58வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். மே.இ.தீவுகளில் உள்ள டிரினிடாட் அண்ட் டொபாகோவில் உள்ள பிரின்சஸ் டவுனில் அவர் செப்டம்பர் 14, 1963-ல் பிறந்தார். ராபின் சிங் பெற்றோர் இந்திய-டிரினிடாட் குடிகள். இவர்கள் டிரினிடாடிலிருந்து 1984-ல் சென்னைக்கு குடிபெயர்ந்தனர். ராபின் சிங் சென்னை பல்கலைக் கழகத்தில் பயின்றார். காலேஜ் நாட்களில் பல கிளப்கள் மற்றும் பல லீகுகளில் பல அணிகளுக்கும் ஆடியுள்ளார், பொறிபறக்கும் பீல்டர், இந்தியாவின் சிறந்த பீல்டர்.

    ஒரு டெஸ்ட் மற்றும் 136 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் ஆடியுள்ளார், இன்றைய டி20 போல் அன்று இருந்திருந்தால் உண்மையில் இவர் சிறந்த டி20 ஆல்ரவுண்டராகத் திகந்திருப்பார், ஜொலித்திருப்பார் ஏனெனில் மிகச்சிறந்த பீல்டர், டீசண்ட் பவுலர், மிடில் ஓவர்களில் கட்டுப்படுத்த பயன்படுத்தலாம், பேட்டிங்கில் பவர் ஹிட்டர். எனவே டி20 பார்ம் அவருக்கு பெரிதும் பொருந்தியிருக்கும்.

    1998-ல் ஜிம்பாப்வேவுக்கு எதிராக டெஸ்ட்டில் அறிமுகமாகி ஒரே டெஸ்ட்டுடன் முடிந்தார். 1989-ல் இந்திய ஒருநாள் அணியில் அறிமுகமானார் ஆனால் இதில் 136 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளை ஆடி 2,336 ரன்களை எடுத்துள்ளார் இதில் ஒரு சதம் மற்றும் 9 அரைசதங்களுடன் 69 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். முதல் தர கிரிக்கெட்டில் தமிழ்நாடு அணிக்காக ரஞ்சி டிராபியில் 1981-82-ல் அறிமுகமானார். மார்ச் 11, 1989-ல் மே.இ.தீவுகளுக்கு எதிராக போர்ட் ஆஃப் ஸ்பெயினில் முதல் ஒருநாள் போட்டியில் ஆடினார்.

    பாண்டியா சகோதரர்களுடன் ராபின் சிங்.


    2001-ல் இவர் இந்திய அணியிலிருந்து நீக்கப்பட்டு பிறகு சேர்க்கப்படவே இல்லை. அவர் கிரிக்கெட்டை விட்டு விட்டு ஹாங்காங் அணியின் கோச் ஆகச் சென்று விட்டார். இந்தியாவின் பீல்டிங் கோச்சாக 2007 முதல் 2009 வரை இருந்திருக்கிறார். தல தோனியின் தலைமையில் 2007-ல் டி20 உலகக்கோப்பையின் போது ராபின் சிங் தான் இந்திய அணியின் பீல்டிங் பயிற்சியாளர்.

    முதல் தர கிரிக்கெட்டில் 137 போட்டிகளில் 6,997 ரன்கள் எடுத்தார். இதில் 22 சதங்கள் 33 அரைசதங்கள் அடங்கும். அதிகபட்ச ஸ்கோர் 183 நாட் அவுட். அதே போல் முதல் தர கிரிக்கெட்டில் 172 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் 4057 ரன்களையும் 150 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.

    வங்கதேசத்தில் 1998-ல் நடந்த சில்வர் ஜூப்ளி சுதந்திரக் கோப்பை கிரிக்கெட் 3வது இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணி 314 ரன்கள் குவிக்க இந்திய அணி 316 ரன்கள் எடுத்து வென்றது ரிஷிகேஷ் கனிட்கர் கடைசி பந்தை பவுண்டரிக்கு அனுப்பி வென்ற திக் திக் போட்டியாகும், இதில் ராபின் சிங் 82 ரன்களை விளாசியதை மறக்கமுடியாது. அதுவும் குறிப்பாக கங்குலி 124 ரன்கள் எடுக்க அவருடன் ராபின் சிங் சேர்ந்து 179 ரன்களை 30 ஓவர்களில் சேர்த்ததே பெரிய இலக்கை விரட்ட காரணமாக அமைந்தது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    அதே போல் 2000-01-ல் கென்யாவில் நடைபெற்ற ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ரிக்கி பாண்டிங்குக்கு பிடித்த கேட்சை மறக்க முடியாது, ரிக்கி பாண்டிங்கின் சக்தி வாய்ந்த புல் ஷாட் அது. இடது புறம் டைவ் அடித்து பிடித்த ராபின் சிங்கை திகைப்புடன் பார்த்தார் ரிக்கி பாண்டிங். பிளைண்டர் என்பார்களே அந்தவகையான கேட்ச். பாண்டிங்கே அதிர்ந்து போன கேட்ச் அது. இந்த ராபின் சிங்கை அவரது பிறந்த தினத்தில் வாழ்த்துவோமே.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: