முகப்பு /செய்தி /விளையாட்டு / IND VS AUS : 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று தொடக்கம்... தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா

IND VS AUS : 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று தொடக்கம்... தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா

ரோஹித் ஷர்மா - விராட் கோலி

ரோஹித் ஷர்மா - விராட் கோலி

இந்திய அணியில் கே.எல்.ராகுலுக்குப் பதில் சுப்மன் கில் களமிறக்கப்படலாம் எனத் தெரிகிறது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Indore, India

இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இந்தூரில் இன்று தொடங்குகிறது.

இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணி அபார வெற்றி பெற்ற நிலையில் 3ஆவது போட்டியிலும் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றும் முனைப்பில் உள்ளது. ரோகித் ஷர்மா தலைமையிலான இந்திய அணியில் , ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் சுழலில் ஆஸ்திரேலிய அணியை திணறடித்து வருகின்றனர்.

தொடரை இழக்காமல் இருக்க வேண்டுமானால், வெற்றி பெற வேண்டிய நெருக்கடி ஆஸ்திரேலிய அணிக்கு உள்ளது. ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக இருந்த பேட் கம்மின்ஸ் சொந்த வேலை காரணமாக நாடு திரும்பிவிட்டார். எனவே அவர் இந்த போட்டியில் விளையாடவில்லை அவருக்கு பதிலாக ஸ்மித் கேப்டனாக செயல்படுகிறார். கம்மின்ஸ்ஸூக்குப் பதில் மிட்செல் ஸ்டார்க் அணியில் இடம் பெற வாய்ப்புள்ளது. இந்திய அணியில் கே.எல்.ராகுலுக்குப் பதில் சுப்மன் கில் களமிறக்கப்படலாம் எனத் தெரிகிறது.

First published:

Tags: Ind Vs Aus, Rohit sharma, Test cricket, Virat Kohli