முகப்பு /செய்தி /விளையாட்டு / இந்தியாவுக்கு எதிரான டெஸ்டில் மோசமான ரிக்கார்டை ஏற்படுத்திய ஆஸ்திரேலிய அணி…

இந்தியாவுக்கு எதிரான டெஸ்டில் மோசமான ரிக்கார்டை ஏற்படுத்திய ஆஸ்திரேலிய அணி…

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி

நாக்பூர் டெஸ்டில் 70 ரன்கள் எடுத்ததுடன் 7 விக்கெட்டுகளை வீழ்த்திய ரவிந்திரா ஜடேஜா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் மோசமான ரிக்கார்டை நாக்பூர் டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி ஏற்படுத்தியுள்ளது. இந்த டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா படுதோல்வியை சந்தித்தது. முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 177 ரன்களும் இரண்டாவது இன்னிங்ஸில் 91 ரன்களும் எடுத்தது. இந்த 91 ரன்கள் இந்தியாவுக்கு எதிராக இந்திய மண்ணில் ஆஸ்திரேலிய அணி எடுத்த மிகக் குறைவான ஸ்கோர் ஆகும். முன்னதாக, 2004-05-ல் மும்பையில் நடைபெற்ற போட்டியில் ஆஸ்திரேலிய அணி 93 ரன்கள் எடுத்திருந்தது. அதை விட 2 ரன்கள் குறைவாக நாக்பூர் டெஸ்டில் ஆஸ்திரேலியா எடுத்துள்ளது.

ஒட்டுமொத்த அளவில் இந்திய அணிக்கு எதிராக ஆஸ்திரேலியாவின் ஒரு இன்னிங்ஸ் ஸ்கோர் 59 ஆக உள்ளது. 1981-இல் மெர்போர்னில் நடந்த டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி இந்த குறைவான ஸ்கோரை எடுத்தது. முதல் டெஸ்டில் படுதோல்வியை சந்தித்துள்ள நிலையில், டெல்லியில் வரும் 17-ஆம் தேதி நடைபெறவுள்ள 2ஆவது டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி கம்பேக் கொடுக்குமா என்ற எதிர்பார்ப்பில் அந்நாட்டு ரசிகர்கள் உள்ளனர். முதல் டெஸ்டில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட் செய்து 177 ரன்களை முதல் இன்னிங்ஸில் எடுத்தது.

இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 400 ரன்கள் எடுத்திருந்த நிலையில் 223 ரன்கள் பின் தங்கியிருந்த ஆஸ்திரேலிய அணி 2ஆவது இன்னிங்ஸில் 91 ரன்னில் ஆல் அவுட் ஆனது. டெஸ்ட் தரவரிசையில் ஆஸ்திரேலிய அணி நம்பர் ஒன் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. நாக்பூர் டெஸ்டில் 70 ரன்கள் எடுத்ததுடன் 7 விக்கெட்டுகளை வீழ்த்திய ரவிந்திரா ஜடேஜா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றியின் மூலம்  4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 1 – 0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

First published:

Tags: Cricket