முகப்பு /செய்தி /விளையாட்டு / ஆஸ்திரேலிய அணியை மிரட்டிய ஸ்பின்னர்கள்… அஷ்வின் – ஜடேஜாவுக்கு மீம்ஸ்கள் மூலம் பாராட்டு…

ஆஸ்திரேலிய அணியை மிரட்டிய ஸ்பின்னர்கள்… அஷ்வின் – ஜடேஜாவுக்கு மீம்ஸ்கள் மூலம் பாராட்டு…

அஷ்வின் - ஜடேஜா

அஷ்வின் - ஜடேஜா

முதல் டெஸ்டில் அஷ்வின் 8 விக்கெட்டுகளையும், ஜடேஜா 7 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஆஸ்திரேலிய அணியின் பேட்ஸ்மேன்களை சுழற்பந்து வீச்சில் மிரட்டி அஷ்வின் – ஜடேஜா இணைக்கு சமூக வலைதளங்களில் மீம்ஸ்கள் குவிந்து வருகின்றன. குறிப்பாக, அஜித்தின் என்னை அறிந்தால் படத்தில் வரும் அதாரு அதாரு பாடலின் மீம்ஸ் வெர்ஷன் ரசிக்கும்படியாக உள்ளது. இதனை அஷ்வின் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்டில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் முன்னிலை வகிக்கிது.

இந்திய அணி வெற்றி பெற ஸ்பின்னர்கள் அஷ்வின் மற்றும் ஜடேஜாவின் பங்களிப்பு பாராட்டும் வகையில் இருந்தது. முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 177 ரன்களில் சுருண்டது. இந்த போட்டியில் ஜடேஜா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அடுத்த இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 91 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணி தரப்பில் அஷ்வின், ஓபனிங் பேட்ஸ்மேன்கள் உள்பட 5 விக்கெட்டுகளை கைப்பற்றி பாராட்டைப் பெற்றார். முதல் டெஸ்டில் அஷ்வின் 8 விக்கெட்டுகளையும், ஜடேஜா 7 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளனர்.

இந்நிலையில் இருவரையும் பாராட்டி சமூக வலைதளங்களில் மீம்ஸ்கள் குவிந்துள்ளன. அவற்றில் ஒன்றை அஷ்வின் பகிர்ந்துள்ளார்.  டெஸ்டில் நம்பர் ஒன் அணியாக இருக்கும் ஆஸ்திரேலியாவை மிகப்பெரிய ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோற்கடித்து சர்வதேச கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளது. இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான 2ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வரும் 17ஆம் தேதி டெல்லியில் நடைபெறுகிறது. 3ஆவது போட்டி மார்ச் 1ஆம் தேதி தர்மசாலாவிலும், கடைசி டெஸ்ட் போட்டி மார்ச் 9ஆம் தேதி அகமதாபாத்திலும் நடைபெறவுள்ளது.

First published:

Tags: Cricket