முகப்பு /செய்தி /விளையாட்டு / அகமதாபாத் டெஸ்டில் சுப்மன் கில் அசத்தல் சதம்… ரன் குவிப்பில் இந்திய அணி

அகமதாபாத் டெஸ்டில் சுப்மன் கில் அசத்தல் சதம்… ரன் குவிப்பில் இந்திய அணி

சுப்மன் கில்

சுப்மன் கில்

74 ரன்களை இந்திய அணி எட்டியபோது முதல் விக்கெட்டை இழந்தது. இதையடுத்து, புஜாராவுடன் இணைந்த தொடக்க வீரர் சுப்மன் கில் நிதானமான விளையாடி ரன்களை சேர்த்தார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

அகமதாபாத்தில் நடைபெற்று வரும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 4 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் சுப்மன் கில் சதம் அடித்து அசத்தியுள்ளார். இந்திய அணி தொடர்ந்து ரன் குவிப்பில் ஈடுபட்டு வருகிறது. இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் 2 போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில், 3ஆவது டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றிருந்தது. இந்நிலையில் கடைசி டெஸ்ட் போட்டி அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

தொடக்க வீரர் உஸ்மான் கவாஜா 422 பந்துகளை எதிர்கொண்டு 180 ரன்கள் எடுத்தார். அவருக்கு சிறப்பான பார்ட்னர்ஷிப் கொடுத்த கேமரூன் க்ரீன் 114 ரன்கள் எடுத்து அசத்தினார். 167.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 480 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணியில் அதிகபட்சமாக அஷ்வின் 91 ரன்கள் விட்டுக் கொடுத்து 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதையடுத்து இந்திய அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியுள்ளது. கேப்டன் ரோஹித் சர்மா 35 ரன்கள் எடுத்திருந்தபோது, குன்மேன் சுழலுல் லபுஸ்சேனிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

74 ரன்களை இந்திய அணி எட்டியபோது முதல் விக்கெட்டை இழந்தது. இதையடுத்து, புஜாராவுடன் இணைந்த தொடக்க வீரர் சுப்மன் கில் நிதானமான விளையாடி ரன்களை சேர்த்தார். 194 பந்துகளில் கில் சதம் அடித்து அசத்தினார். இதில் 10 பவுண்டரிகளும், 1 சிக்சரும் அடங்கும். 121 பந்துகளில் 42 ரன்கள் சேர்த்த புஜாரா மர்ஃபி பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. முறையில் ஆட்டமிழந்து வெளியேறினார். இருவரும் 2 ஆவது விக்கெட்டிற்கு 113 ரன்கள் சேர்த்தனர். 2 விக்கெட்டுகளை இழந்த நிலையில் இந்திய அணி தொடர்ந்து ரன் குவிப்பில் ஈடுபட்டு வருகிறது.

First published:

Tags: Cricket