• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • பிளாங்க் செக் ரெடி... டி20 உலகக் கோப்பையில் இந்திய அணியை வீழ்த்தினால் பாக் வீரர்களுக்கு மெகா பரிசு

பிளாங்க் செக் ரெடி... டி20 உலகக் கோப்பையில் இந்திய அணியை வீழ்த்தினால் பாக் வீரர்களுக்கு மெகா பரிசு

பாகிஸ்தான் வீரர்கள்

பாகிஸ்தான் வீரர்கள்

டி20 உலகக் கோப்பையில் இந்திய அணியை பாகிஸ்தான் வீழ்த்தினால் மெகா பரிசு கிடைக்குமென அந்நாட்டு கிரிக்கெட் வாரிய தலைவர் ரமீஸ் ராஜா தெரிவித்துள்ளார்.

  • Share this:
    இந்தியா - பாகிஸ்தான் தான் கிரிக்கெட் போட்டி என்றாலே கீரியும் பாம்பும் மோதுவது போல் எப்போது பரபரப்பாகவே இருக்கும். கடந்த 2008-ம் ஆண்டு மும்பை தாக்குதலுக்கு பின் இரு நாடுகளும் நேருக்கு நேர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதில்லை. ஆனால் ஐசிசி நடத்தும் தொடர்களில் இரு நாடுகளும் விளையாடி வருகிறது. இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக் கோப்பை 2019 தொடரில் கடைசியாக இரு அணியும் மோதின. இந்தப் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

    ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் அக்டோபர் 17-ம் தேதி முதல் நவம்பர் 14-ம் தேதி வரை நடைபெற உள்ளன. இதில் சூப்பர் 12 பிரிவில் குரூப்- 2 பிரிவில் இந்திய அணி இடம் பெற்றுள்ளது. இந்திய அணியோடு சேர்த்து பாகிஸ்தான், நியூஸிலாந்து, ஆப்கானிஸ்தான் அணிகளும், பி பிரிவில் முதலிடம் பெறும் அணியும், ஏ பிரிவில் 2-ம் இடம் பெறும் அணியும் இடம் பெறும்.

    துபாயில் வரும் அக்டோபர் 24-ம் தேதி இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியுடன் மோதுகிறது. உலகக் கோப்பை போட்டி வரலாற்றில் இதுவரை இந்திய அணியை பாகிஸ்தான் அணி வென்றதே இல்லை என்ற வரலாறு தொடர்ந்து வருகிறது. ஐசிசி சாம்பியன் டிராபி இறுதி போட்டியில் மட்டும் பாகிஸ்தான் இந்தியாவை வீழ்த்தியது.

    Also Read : ஐபிஎல் அடுத்த சீசனிலும் சிஎஸ்கே அணியில் தோனி விளையாடுகிறார் - தகவல்

    இதனால் ஒவ்வொரு உலகக் கோப்பை தொடரின் போட்டியின் போதும் இந்தியாவை வீழ்த்தி வரலாற்றை மாற்றி எழுத வேண்டுமென்று பாகிஸ்தானுக்கு நெருக்கடி ஏற்படும். இந்த முறை பாபர் ஆஸம் தலைமையிலான பாகிஸ்தான் அணி இந்தியாவை வீழ்த்த கடுமையாக பயிற்சி மேற்கொண்டு வருகிறது. பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆஸமின் மிகவும் ஆக்ரோஷமாக உள்ளதால் இந்த முறை போட்டி பரபரப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில் கராச்சியில் நடைபெற்ற ஆலேசானை குழு கூட்டத்தில் ரமீஸ் ராஜா பேசுகையில், இந்த முறை டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணியை பாகிஸ்தான் எப்பாடியவது வீழ்த்த வேண்டும். அப்படி நடந்துவிட்டால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு பிளாங்க் செக் மிகப்பெரிய முதலீட்டாளர்களிடமிருந்து கிடைக்கும்“ என தெரிவித்துள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: