“இந்தாங்க ‘ப்ளாங்க் செக்’ எவ்வளவு வேணாலும் தரேன்” க்ருனல் பாண்டியாவின் பெரிய மனசு!

க்ருனல் பாண்டியா மற்றும் ஜேக்கப் மார்டின்.

Blank Cheque From #KrunalPandya For Ex-Cricketer | முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜேக்கப் மார்டினின் மருத்துவச் செலவுக்கு பணமில்லாமல் அவரது மனைவி தவித்து வருவதாக தகவல் வெளியானது.

 • News18
 • Last Updated :
 • Share this:
  முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜேக்கப் மார்ட்டினின் சிகிச்சைக்காக எவ்வளவு பணம் வேண்டுமென்றாலும் தருகிறேன் எனக்கூறி ‘பிளாங்க் செக்’ கொடுத்துள்ளார் க்ருனல் பாண்டியா.

  இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், குஜராத் மாநிலம், பரோடாவைச் (தற்போது வதோதரா) சேர்ந்தவருமான ஜேக்கப் மார்ட்டின், கடந்த மாதம் (டிச.28) சாலை விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார். இதனை அடுத்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இவரின் சிகிச்சைக்கு நாளொன்றுக்கு ரூ.70,000 செலவு ஆகிறது.

  jacob martin I ஜேக்கப் மார்டின்
  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஜேக்கப் மார்ட்டின். (Twitter)


  1999 - 2001-ம் ஆண்டு வரை இந்திய அணிக்காக விளையாடிய ஜேக்கப் மார்ட்டின், 138 போட்டிகளில் முதல் தர போட்டிகளில் விளையாடி 9,192 ரன்கள் எடுத்துள்ளார். கடந்த 2009-ம் ஆண்டு கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்ற பிறகு, 2016-17 சீசனில் பரோடா அணிக்கு பயிற்சியாளராகவும் அவர் பணியாற்றினார்.

  இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜேக்கப் மார்ட்டின். (Getty: Images)


  46 வயதான மார்டினின் மருத்துவச் செலவுக்கு பணமில்லாமல் அவரது மனைவி தவித்து வருவதாக தகவல் வெளியானது. இதனை அடுத்து, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) சார்பில் ரூ. 5 லட்சமும், பரோடா கிரிக்கெட் சங்கம் சார்பில் ரூ.2.70 லட்சமும் நிதியுதவி வழங்கப்பட்டது.

  பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, சவுரவ் கங்குலி, ஜாகிர் கான், முனாப் பட்டேல், யூசுப் பதான் உள்ளிட்ட பல கிரிக்கெட் வீரர்களும் உதவி செய்வதாக தெரிவித்துள்ளனர். இந்நிலையில், ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவின் சகோதர் க்ருனல் பாண்டியா பெரும் உதவி செய்து நெகிழ வைத்துள்ளார்.

  Krunal Pandya, க்ருனல் பாண்டியா
  க்ருனல் பாண்டியா. (ICC)


  இதுகுறித்து பரோடா கிரிக்கெட் வாரியத்தின் முன்னாள் செயலாளர் சஞ்சய் பட்டேல் கூறுகையில், “ஹர்திக் பாண்டியாவின் சகோதர் க்ருனல் பாண்டியா, மார்ட்டினின் சிகிச்சைக்காக எவ்வளவு பணம் வேண்டுமென்றாலும் தருகிறேன் எனக்கூறி ‘பிளாங்க் செக்’ கொடுத்தார். ஒரு லட்சத்துக்கு குறைவாக அதில் நிரப்பக் கூடாது என கேட்டுக்கொண்டார்” என்று தெரிவித்தார்.

  க்ருனல் பாண்டியாவின் பெரிய மனசை கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் பாராட்டி வருகின்றனர்.

  ரோகித் உடனான உறவு குறித்து இங்கிலாந்து நடிகை ஓபன் டாக்!

  Also Watch...

  Published by:Murugesan L
  First published: