Home /News /sports /

அன்று மஞ்சுரேக்கர், இன்று ஸ்மித் : அக்சர் படேலை துண்டு துணுக்கு வீரர் என்று கிண்டல்

அன்று மஞ்சுரேக்கர், இன்று ஸ்மித் : அக்சர் படேலை துண்டு துணுக்கு வீரர் என்று கிண்டல்

அக்சர் படேல் துண்டு துணுக்கு வீரரா?

அக்சர் படேல் துண்டு துணுக்கு வீரரா?

ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவை 2019 உலகக்கோப்பையின் போது துண்டு துணுக்கு வீரர் என்று முன்னாள் இந்திய வீரரும் வர்ணனையாளருமான சஞ்சய் மஞ்சுரேக்கர் கூறி சரியான சர்ச்சையில் சிக்கி, ஜடேஜாவிடம் வாங்கிக் கட்டிக்கொண்டு இதனால் ஐபிஎல் வர்ணனை வருவாயையும் இழந்து தவித்தார். நேற்று தென் ஆப்பிரிக்கா முன்னாள் கேப்டன் கிரேம் ஸ்மித் இந்திய வீரர் அக்சர் படேலை துண்டு துணுக்கு பேட்டர் என்று வர்ணித்துள்ளார்.

மேலும் படிக்கவும் ...

    அன்று 2வது ஒருநாள் போட்டியின் போது கட்டாக்கில் தினேஷ் கார்த்திக் எனும் பெரிய ஹிட்டர், முன்னாள் டெஸ்ட் வீரர் இருக்கும் போது அக்சர் படேலை சிங்கிள் ரொடேட் செய்வதற்காக இறக்கியதாக இந்திய அணி நிர்வாகம் சார்பில் ஷ்ரேயஸ் அய்யர் தெரிவித்தார்.

    அக்சர் படேலை முன்னால் இறக்கியது சுனில் கவாஸ்கர், கிரேம் ஸ்மித், கவுதம் கம்பீர் ஆகியோர்களிடத்து பெரிய விமர்சனங்களை ஈர்த்தது.

    இந்நிலையில் தென் ஆப்பிரிக்கா முன்னாள் கேப்டன் இப்போது வர்ணனையில் இருக்கும் கிரேம் ஸ்மித் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில், “எந்த உலகத்தில் ஒரு ஆல்ரவுண்டர் அதுவும் அக்சர் படேல் ஒரு துண்டு துணுக்கு பேட்டர் தினேஷ் கார்த்திக் என்ற முன்வரிசை வீரருக்கு முன்னதாக களமிறக்கப்படுவார்? இது எனக்குப் புரியவில்லை, தினேஷ் கார்த்திக் ஒரு அனுபவசாலி. இந்தியாவுக்காக அவர் அத்தனை போட்டிகளில் ஆடியிருக்கிறார். எப்படி அக்சர் படேலை இறக்கினார்கள்? இது எனக்கு கடும் அதிர்ச்சியை அளிக்கிறது” என்றார்.

    பிட்ஸ் அண்ட் பீசஸ் என்ற வார்த்தையை பயன்படுத்தி இன்னொரு ஆல்ரவுண்டர் ஜடேஜாவிடம் சஞ்சய் அன்று வாங்கிக் கட்டிக்கொண்டார், இப்போது அக்சர் படேலிடம் கிரேம் ஸ்மித் என்ன வாங்கிக் கட்டிக் கொள்ளப் போகிறாரோ?
    Published by:Muthukumar
    First published:

    Tags: Axar patel, India vs South Africa

    அடுத்த செய்தி