Home /News /sports /

‘ஓர் இந்திய ஆளுமை...’- விம்பிள்டனில் பர்த் டே பாய் தோனி- வைரலான படம்

‘ஓர் இந்திய ஆளுமை...’- விம்பிள்டனில் பர்த் டே பாய் தோனி- வைரலான படம்

மகேந்திர சிங் தோனி

மகேந்திர சிங் தோனி

ஜூலை 7 ஆம் தேதி (வியாழன்) 41 வயதை எட்டிய தோனியின் படத்தை விம்பிள்டன் பகிர்ந்துள்ளது. "ஒர் இந்திய ஆளுமை... என்று அதில் எழுதப்பட்டிருந்தது. நான்கு முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் தன் டிவிட்டர் பக்கத்திலும் அதே படத்தை பகிர்ந்துள்ளது. மேலும், பேட்டிங் ஐகான் சுனில் கவாஸ்கரும் விம்பிள்டன் ரசிகர்கள் இடையே இருந்தார்.

டி20 உலகக் கோப்பை (2007), ஒருநாள் உலகக் கோப்பை (2011) மற்றும் சாம்பியன்ஸ் டிராபி (2013) ஆகிய மூன்று ஐசிசி கோப்பைகளை வென்ற ஒரே கேப்டன் தோனி மட்டுமே. தோனியின் தலைமையில் தான் இந்தியா டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகள் இரண்டிலும் முதலிடத்தை எட்டியது.



2007 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற தொடக்க T20 உலகக் கோப்பையில் ஒரு இளம் கேப்டனாகவெற்றிக்கு அழைத்துச் சென்றபோது அவரது கேப்டன்சி வாழ்க்கை புகழ்பெறத் தொடங்கியது. அவர் விளையாட்டின் மிகவும் விரும்பத்தக்க கேப்டன்களில் ஒருவராக ஆனார்.

தோனியின் கீழ், இந்தியா 72 டெஸ்ட் போட்டிகளில் 41 போட்டிகளையும், 200ல் 110 ODI போட்டிகளையும், 60ல் 27 T20I ஆட்டங்களையும் வென்றது. பேட்டிங் முன்னணியில், 2004 முதல் 2019 வரையிலான தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்வில் 17,226 ரன்கள் குவித்துள்ளார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு , 2019 உலகக் கோப்பையில் அணி அரையிறுதியில் வெளியேறியதன் மூலம், அவர் இந்தியாவுடனான தனது  புகழ்பெற்ற கிரிக்கெட் வாழ்க்கைக்கு ஓய்வு மூலம் நிறைவளித்தார்.
Published by:Muthukumar
First published:

Tags: Dhoni, Wimbledon

அடுத்த செய்தி