பிளாஸ்டிக் கழிவுகளை அப்புறப்படுத்தும் வாத்து..! யுவராஜ் சிங் பகிர்ந்த மனதை உருக்கும் வீடியோ

பிளாஸ்டிக் கழிவுகளை அப்புறப்படுத்தும் வாத்து..! யுவராஜ் சிங் பகிர்ந்த மனதை உருக்கும் வீடியோ
வீடியோ காட்சி
  • Share this:
பிளாஸ்டிக் கழிவுகளை அப்புறப்படுத்தும் வாத்து ஒன்றின் வீடியோவை யுவராஜ் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

மாமல்லபுரத்தில் பிரதமர் மோடி பிளாஸ்டிக் குப்பைகளை வெறும் கைகளால் சுத்தம் செய்த வீடியோ இணையத்தில் வைரலானது. மேலும் பிரதமர் மோடி மக்கள் புழங்கும் பொதுவெளிகள் தூய்மையாக இருக்க உறுதி செய்வோம். அதேபோல் உடல் உறுதியும், ஆரோக்கியமும் காக்க முனைப்புடன் செயல்படுவோம்”என்று பதிவிட்டிருந்தார்.

பிரதமர் மோடியின் பதிவிற்கக பாராட்டுகள் குவிந்த வண்ணம் இருந்தாலும் நடைமுறையில் பிளாஸ்டிக் கழிவு குறித்த விழிப்புணர்வு மக்களிடம் குறைவாகவே உள்ளது. அதனை எடுத்துக்காட்டும் வகையில் யுவராஜ் சிங் வீடியோ ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


அதில், “வாத்து கூட்டம் நீந்தும் நீர் பிளாஸ்டிக் கழிவினால் தேங்கி உள்ளது. இதனை சீரமைக்கும் விதமாக வாத்து ஒன்று பிளாஸ்டிக் கழிவுகளை அப்புறப்படுத்தி வருகிறது. அதன் அருகில் வாத்துக்குஞ்சுகள் நீந்தி கொண்டிருக்கிறது“.

இந்த வீடியோவை பதிவு செய்துள்ள யுவராஜ், “வாத்துக்கூட்டத்திற்கு ஏற்பட்டுள்ள இந்த கஷ்டத்தை பார்க்கும் போது மனம் உடைகிறது. பிளாஸ்டிக் நமது பிரபஞ்சத்தை சீரழித்து வருகிறது. அதை சீரமைப்பதற்கான வழிமுறைகளை நாம் கண்டுபிடிக்க வேண்டும். இந்த அப்பாவி பறவைகளிடமிருந்து நாம் மாசுப்பாட்டிற்கான தீர்வை கற்றுக் கொள்ள வேண்டும்“ என்றுள்ளார்.



யுவராஜ் சிங்கின் இந்த பதிவிற்கு பலர் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். பிளாஸ்டிக் ஒழிப்பு என்று வீண் முழக்கங்களை புறம் தள்ளி விட்டு சீரமைப்பு பணியில் அனைவரும் ஈடுபட வேண்டும் என்றும் பதிவிட்டு வருகின்றனர்.

Also Watch

First published: October 15, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...