Ind vs Eng Ashwin: ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு கொரோனா பாசிட்டிவ்: இங்கிலாந்து செல்லவில்லை
Ind vs Eng Ashwin: ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு கொரோனா பாசிட்டிவ்: இங்கிலாந்து செல்லவில்லை
அஸ்வின்
ரவிச்சந்திரன் அஸ்வின் கோவிட் -19 தொற்று காரணமாக இங்கிலாந்துக்கு எதிரான ஜூலை 1ம் தேதி நடைபெறும் 5வது டெஸ்ட் போட்டிக்காக தனது இந்திய அணி வீரர்களுடன் இங்கிலாந்து செல்லவில்லை என்று பிசிசிஐ வட்டாரம் திங்களன்று பிடிஐக்கு தெரிவித்துள்ளது.

அஸ்வின் இப்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இவர் அனைத்து நடைமுறைகளும், விதிமுறைகளும் கடைப்பிடிக்கப்பட்ட பிறகே இந்திய அணியுடன் இணைவார் என்று பிடிஐ செய்திகள் கூறுகின்றன. இந்திய அணி ஏற்கெனவே இங்கிலாந்துக்கு ஜூன் 16ம் தேதி சென்று விட்டது.
அஸ்வின் புறப்படுவதற்கு முன்பு கோவிட் 19 பாசிட்டிவ் ஆனதால் இங்கிலாந்துக்கு இந்திய அணியுடன் பயணம் செய்யவில்லை. ஆனால், ஜூலை 1-ம் தேதி டெஸ்ட் போட்டி தொடங்குவதற்கு முன்பு அவர் சரியான நேரத்தில் குணமடைவார் என்று நாங்கள் நம்புகிறோம்," என்று பிசிசிஐ தரப்பில் பெயர் கூற விரும்பாத ஒரு நபர் பிடிஐ-யிடம் தெரிவித்துள்ளார். இதனால் பயிற்சி ஆட்டத்தில் அஸ்வின் ஆடமாட்டார் என்று கூறப்பட்டுள்ளது.
முந்தைய நாள், கேப்டன் ரோஹித் ஷர்மா மற்றும் தொடக்க ஆட்டக்காரர் ஷுப்மான் கில் வலைப்பயிற்சியில் ஈடுபட்ட வீடியோவைப் பகிர்ந்துள்ளது. லீசெஸ்டர்ஷைர் கவுண்டி மைதானத்தில் இருவரும் ஆடியதால் டெஸ்ட்டிலும் இந்த ஜோடி இந்தியாவுக்கான இன்னிங்ஸைத் தொடங்க வாய்ப்புள்ளது. இந்திய அணி ஜூன் 24 முதல் லீசெஸ்டர்ஷையருடன் நான்கு நாள் பயிற்சி ஆட்டத்தில் விளையாடுகிறது. வெளிநாடுகளில் டெஸ்ட் கிரிக்கெட்டில் ரோஹித் அணியை வழிநடத்துவது இதுவே முதல் முறையாகும்.
Published by:Muthukumar
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.