ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

சி.எஸ்.கே அணியில் இருந்து முக்கிய வீரர் விலகல்? சென்னை ரசிகர்கள் அதிர்ச்சி!

சி.எஸ்.கே அணியில் இருந்து முக்கிய வீரர் விலகல்? சென்னை ரசிகர்கள் அதிர்ச்சி!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. (CSK)

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. (CSK)

Big blow for #CSK, Important All Rounder likely to be ruled out of #IPL2019 | சென்னை அணி, ஏற்கனவே ப்ளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்துவிட்டதால், இந்த தோல்வியால் எந்தவித பாதிப்பும் இல்லை.

 • News18
 • 2 minute read
 • Last Updated :

  ஐ.பி.எல் போட்டியில் ப்ளே ஆஃப் சுற்று தொடங்கிய நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து முக்கிய வீரர் விலகியதாக தகவல் வெளியாகியுள்ளது.

  ஐ.பி.எல் டி-20 கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது கடைசி லீக் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை எதிர்கொண்டது. மொஹாலியில் நடந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 170 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக, டூ பிளெசிஸ் 96 ரன்களும், சுரேஷ் ரெய்னா 53 ரன்களும் எடுத்தனர்.

  அடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணி, கே.எல்.ராகுலின் (71) அதிரடியால் 18 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி இலக்கை எட்டியது. சென்னை அணி, ஏற்கனவே ப்ளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்துவிட்டதால், இந்தத் தோல்வியால் எந்தவித பாதிப்பும் இல்லை.

  இந்தப் போட்டியில் ஆல் ரவுண்டர் கேதர் ஜாதவுக்கு காயம் ஏற்பட்டதால், எஞ்சியுள்ள போட்டிகளில் அவர் விளையாடுவது சந்தேகம் என தெரியவந்துள்ளது.

  Kedar Jadhav, CSK, IPL,
  கேதர் ஜாதவ். (BCCI)

  போட்டி முடிந்த பிறகு பயிற்சியாளர் பிளெமிங் பேசுகையில், “கேதர் ஜாதவுக்கு நாளை ஸ்கேன் எடுக்கப் போகிறார்கள். மீண்டும் அவர் தொடரில் விளையாடுவாரா என தெரியவில்லை. அவர் அசவுகரியமாக இருக்கிறார் என்று கூறினார்.

  Stephen Fleming, CSK, IPL
  சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளர் பிளெமிங். (BCCI)

  மேலும், உலகக்கோப்பை தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியிலும் கேதர் ஜாதவ் இடம்பெற்றிருந்தார். ஒரு வேளை அவர் விரைவில் குணம் அடைந்தாலும், உலகக்கோப்பை தொடரை கருத்தில் கொண்டு ஐ.பி.எல் போட்டியில் இருந்து ஓய்வு அளிக்கப்படும் என தெரிகிறது.

  ஐபிஎல்-ல வேலை முடிஞ்சது... அதனால இப்ப சினிமா... - ஆண்ட்ரு ரசல் அதிரடி பிளான்

  Video: ஜூனியர் இம்ரான் தாஹிர் ரெடி!


  தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.  விளையாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.


  Published by:Murugesan L
  First published:

  Tags: Chennai Super Kings, Cricket, CSK, IPL 2019, Kedar Jadhav, MS Dhoni