ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

டி20 போட்டியில் 15 ரன்களுக்கு ஆல் அவுட்… மோசமான சாதனை படைத்த கிரிக்கெட் அணி

டி20 போட்டியில் 15 ரன்களுக்கு ஆல் அவுட்… மோசமான சாதனை படைத்த கிரிக்கெட் அணி

ஆட்டமிழந்து வெளியேறும் அலெக்ஸ் ஹேல்ஸ்

ஆட்டமிழந்து வெளியேறும் அலெக்ஸ் ஹேல்ஸ்

கடந்த 13-ஆம் தேதி பிபிஎல் தொடரின் லீக் ஆட்டங்கள் தொடங்கின. இந்நிலையில் இன்று அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ் அணியை சிட்னி தண்டர் அணி எதிர்கொண்டது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

டி20 கிரிக்கெட் வரலாற்றில் 15 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி மோசமான சாதனையை ஆஸ்திரேலியாவை சேர்ந்த உள்ளூர் அணி ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த தகவல்கள் கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

இந்தியாவில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளைப் போன்று ஆஸ்திரேலியாவில் பிக் பேஷ் லீக் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதனை பிபிஎல்  என்று அழைக்கிறார்கள். 2022 – 23 ஆம் ஆண்டுக்கான பிக் பாஷ் லீக் போட்டிகள் தற்போது தொடங்கியுள்ளன.

பெர்த் ஸ்கார்ச்சர்ஸ், மெல்போர்ன் ரெனிகேட்ஸ், மெல்போர்ன் ஸ்டார்ஸ், ஹோபர்ட் ஹரிகேன்ஸ், சிட்னி சிக்சர்ஸ், சிட்னி தண்டர், அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ் மற்றும் பிரிஸ்பேன் ஹீட் ஆகிய 8 அணிகள் இடம்பெற்றுள்ளன. ஒட்டுமொத்தமாக பிபிஎல் கிரிக்கெட் தொடரில் 61 போட்டிகள் நடைபெறும்.

வங்கதேசத்திற்கு எதிரான 2ஆவது டெஸ்டில் இணையும் ரோகித் சர்மா… விரைவில் அறிவிப்பு வெளியாகிறது…

கடந்த 13-ஆம் தேதி பிபிஎல் தொடரின் லீக் ஆட்டங்கள் தொடங்கின. இந்நிலையில் இன்று அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ் அணியை சிட்னி தண்டர் அணி எதிர்கொண்டது.

முதலில் பேட்செய்த அடிலெய்டு 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 139 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக கிறிஸ் லின் 36 ரன்களும், கோலின் டி கிராண்ட்ஹோம் 33 ரன்களும் எடுத்தனர்.

இதன்பின்னர் 140 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சிட்னி தண்டர் அணியின் பேட்ஸ்மேன்கள் களத்தில் இறங்கினர். தொடக்க வீரரான இங்கிலாந்து அணியின் அலெக்ஸ் ஹேல்ஸ் 2 பந்துகளை எதிர்கொண்டு ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.

மற்றொரு ஆட்டக்காரர் மேத்யூ ஜில்கீல் 2 பந்துகளில் ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார். அடுத்து களத்தில் இறங்கிய ரிலீ ரூசோ 3 ரன்களும், ஜேசன் சங்கா ரன் ஏதும் எடுக்காமலும், அலெக்ஸ் ரோஸ் 2 ரன்களிலும் வெளியேறினர்.

ரஞ்சி கோப்பை தொடரில் கலக்கும் இஷான் கிஷன்… சதம் அடித்து அசத்தல்

இதனால் 5 விக்கெட் இழப்புக்கு 9 ரன்களுடன் தண்டர் அணி தள்ளாடிக் கொண்டிருந்தது. இதன்பின்னர் களத்திற்கு வந்த டேனியல் சாம்ஸ் 1 ரன்னிலும், ஆலிவர் டேவிஸ் 1 ரன்னிலும், கிறிஸ் க்ரீன், குரிந்தர் சாந்து ரன் ஏதும் எடுக்காமலும் வெளியேறினர்.

அடுத்து வந்த பிரென்டன் டோகட் 4 ரன்னிலும், பசல்ஹக் பரூக்கி 1 ரன்னிலும் ஆட்டமிழக்க சிட்னி தண்டர் அணி 10 விக்கெட்டுகளையும் இழந்து 15 ரன்கள் மட்டுமே எடுத்து 124 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

அதிகபட்சமாக ஹென்றி தோர்ன்டன் 5 விக்கெட்டுகளையும், வெஸ் அகர் 4 விக்கெட்டுகளையும் எடுத்தனர்.

டி20 ஓவர் போட்டிகளில் மிகக்குறைந்த ரன்னுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த அணி என்ற மோசமான ரிக்கார்டை சிட்னி தண்டர் அணி இன்று ஏற்படுத்தியுள்ளது.

First published:

Tags: Cricket