தவான் லெவனை தோற்கடித்த புவனேஷ்வர் லெவன்: பயிற்சி ஆட்டத்தில் சுவாரசியம்

புவனேஷ்வர் குமார் பவுலிங்.

 • Share this:
  இலங்கை சென்றுள்ள ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி தங்களுக்குள்ளேயே மேட்ச் ஆடி பயிற்சி மேற்கொண்டது, இதில் புவனேஷ்வர் குமார் அணி 17 ஓவர்களில் 155 ரன்களை விரட்டி வெற்றி வாகை சூடியது.

  இலங்கை சென்றுள்ள இந்திய அணிக்கு துணைக் கேப்டனாக புவனேஷ்வர் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அணியை இரண்டாகப் பிரித்து தவான் தலைமையில் ஒரு அணியும் புவனேஷ்வர் குமார் தலைமையில் ஒரு அணியும் பிரிக்கப்பட்டு தங்களுக்குள் பயிற்சி டி20 ஆட்டம் ஆடினர்.

  Also Read: India vs England: பிரிதிவி ஷா, படிக்கல்லை அனுப்புமாறு கேட்ட கோலி, ரவிசாஸ்திரி- மறுக்கும் தேர்வுக்குழு

  ஷிகர் தவான் டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். ருதுராஜ் கெய்க்வாட் 30+ ரன்களை எடுத்து நல்ல தொடக்கம் கொடுத்தார். ஆனால் தவான் அணியில் ஆடிய மணீஷ் பாண்டே 63 ரன்களை அதிகபட்சமாக எடுத்தார். இதனால் தவான் லெவன் 154 ரன்கள் என்ற ஸ்கோரை எட்டியது. பந்து வீச்சில் துணைக் கேப்டன் புவனேஷ்வர் குமார் அசத்தினார், 4 ஓவர்கள் வீசி 23 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளைச் சாய்த்தார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Also Read: சுப்மன் கில் காயம் பற்றி சந்தேகித்து கங்குலியை அவமதிக்கிறார் சபா கரீம்: பிசிசிஐ காட்டம்  இலக்கை விரட்டிய புவனேஷ்வர் குமார் லெவனில் சூரிய குமார் யாதவ் அரைசதம் விளாசினார். தொடக்கத்தில் தேவ்தத் படிக்கல், பிரிதிவி ஷா 60 ரன்கள் விளாசி அதிரடியாக ஆடி அடித்தளம் அமைத்துக் கொடுத்தனர்.

  சூரியகுமார் யாதவ் அரைசதம் அடிக்க 17 ஓவர்களில் இலக்கு விரட்டப்பட்டு புவனேஷ்வர் குமார் லெவன் வென்றது.
  இதனை பிசிசிஐ-டிவி தளத்தில் பவுலிங் கோச் பராஸ் மாம்ப்ரே வீடியோவில் பேசி தொகுத்து வழங்கியுள்ளார்.
  Published by:Muthukumar
  First published: