சூப்பர்மேனாக மாறி புவனேஸ்வர் குமார் பிடித்த கேட்ச் - வீடியோ

இந்திய அணி டக்வர்த் லூயிஸ் முறைப்படி 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Vijay R | news18-tamil
Updated: August 12, 2019, 5:10 PM IST
சூப்பர்மேனாக மாறி புவனேஸ்வர் குமார் பிடித்த கேட்ச் - வீடியோ
புவனேஷ்வர் குமார்
Vijay R | news18-tamil
Updated: August 12, 2019, 5:10 PM IST
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 2வது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி டக்வர்த் லூயிஸ் முறைப்படி 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டி20, 3 ஒரு நாள், 2 டெஸ்ட் தொடர்களில் விளையாடி வருகிறது. டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் மேற்கிந்திய தீவுகள் அணியை ஒயிட் வாஷ் செய்து இந்திய அணி தொடரை கைப்பற்றியது.

ஒரு நாள் தொடரின் முதல் போட்டி மழையின் காரணமாக ரத்து செய்யப்பட்டது. 2வது ஒரு நாள் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா அணி முதலில் பேட்டிங் செய்தது. கேப்டன் விராட் கோலியின் அபார சதத்தால் இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 279 ரன்கள் எடுத்தது. கேப்டன் விராட் கோலி 120 ரன்களும், ஷ்ரேயாஸ் ஐயர் 71 ரன்கள் எடுத்தனர்.


அதையடுத்து களமிறங்கிய மேற்கிந்தி தீவுகள் அணி விளையாடி கொண்டிருக்கும் போது போட்டியின் 12.5-வது ஓவரில் மழை குறுக்கிட்டதால் போட்டி நிறுத்தப்பட்டது. பின் போட்டி 46 ஓவர்களாக குறைக்கப்பட்டு டக்வர்த் லூயிஸ் முறைப்படி 270 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயக்கப்பட்டது.

மேற்கிந்திய தீவுகள் அணி 42 ஓவர்களில் அனைத்து விக்கெட்டைகளையும் இழந்து 210 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணி டக்வர்த் லூயிஸ் முறைப்படி 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

புவனேஸ்வர்குமார் 35வது ஓவரை வீசும் போது ராஷ்டன் சேஸ் பேட்டிங் செய்து கொண்டார். புவனேஸ்குமார் வீசிய பந்தை ராஷ்டன் சேஸ் ரன் எடுக்க முயன்றார். அப்போது பேட்டின் விளிம்பில் பட்ட பந்தை புவனேஸ்வர்குமார் பாய்ந்து கேட்ச் பிடித்தார்.

Loading...
இந்த போட்டியில் புவனேஸ்குமார் சிறப்பாக பந்துவீசி 31 ரன்களுக்கு 4 விக்கெட்டை வீழ்த்தி அசத்தினார். ஆட்டநாயகன் விருதை கேப்டன் விராட் கோலி பெற்றார். இந்த வெற்றியின் மூலம் ஒரு நாள் தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

Also Watch

First published: August 12, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...