Bhuvaneshwar Kumar: இந்திய அணி வீரர் புவனேஸ்வர் குமாரின் தந்தை மரணம்!

புவனேஸ்வர் குமாரின் தந்தை காலமானார்.

தந்தை மறைவைவுக்காக புவனேஸ்வர் குமாருக்கு விளையாடுத்துறையினரும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

  • Share this:
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் புவனேஸ்வர் குமாரின் தந்தை காலமானார்.

இந்திய அணியின் சிறந்த வேகப்பந்துவீச்சாளர்களுள் ஒருவரான புவனேஸ்வர் குமாரின் தந்தை கிரண் பால் சிங் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அவருடைய வீட்டில் நேற்று காலமானார். அவருக்கு வயது 63. உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் உள்ள வீட்டிலேயே அவருடைய உயிர் பிரிந்தது.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் துபாயில் ஐபிஎல் போட்டிகளில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக புவனேஸ்வர் குமார் விளையாடிக் கொண்டிருந்த போது அவருடைய தந்தை கிரண் பால் சிங்கிற்கு கல்லீரல் புற்றுநோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதனையடுத்து அவர் துபாயிலிருந்து அவசர அவசரமாக நாடு திரும்பினார்.

இதன் பின்னர் கிரண் பால் சிங், டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு கீமோதெரபி உள்ளிட்ட சிகிச்சைகள் இங்கிலாந்து மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் வழங்கப்பட்டது. அதன் பின்னர் அவர் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினார்.

இந்த நிலையில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னதாக அவருடைய உடல்நிலை மோசமடைந்தது, மீரட்டின் கங்கா நகர் பகுதியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு இரண்டு நாட்கள் சிகிச்சை பெற்று திரும்பினார். இந்நிலையில் நேற்றிரவு அவர் திடீரென காலமானார்.

உத்தரப்பிரதேச காவல்துறையில் உதவி காவல் ஆய்வாளராக பணியாற்றி வந்த புவனேஸ்வர் குமாரின் தந்தை கிரண் பால் சிங், பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்றார்.

உயிரிழந்த கிரண் பால் சிங்கிற்கு இந்திரேஷ் தேவி என்ற மனைவியும், புவனேஸ்குமார் மற்றும் ரேகா என்ற மகளும் உள்ளனர்.

தந்தை மறைவைவுக்காக புவனேஸ்வர் குமாருக்கு விளையாடுத்துறையினரும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

புவனேஸ்வர் குமார் தற்போது வீட்டில் இருந்து வருகிறார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டி மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் புவனேஸ்வர் குமார் இடம்பெறவில்லை. இருப்பினும் அவர் ஜூலை மாதம் இலங்கைக்கு எதிராக நடைபெற இருக்கும் குறைந்த ஓவர்கள் கொண்ட போட்டிகளுக்கான அணியில் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Published by:Arun
First published: