Home /News /sports /

புவனேஷ்வர் குமார் புதிய சாதனை - ஜாகீர் கானை முறியடித்தார்

புவனேஷ்வர் குமார் புதிய சாதனை - ஜாகீர் கானை முறியடித்தார்

புவனேஷ்வர் குமார்

புவனேஷ்வர் குமார்

இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் அதியற்புதமாக வீசிய புவனேஷ்வர் குமார் தொடர் நாயகன் விருதை வென்றார்.

    இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் அதியற்புதமாக வீசிய புவனேஷ்வர் குமார் தொடர் நாயகன் விருதை வென்றார்.

    5வது டி20 போட்டியில் 3.3 ஓவர்களில் 28/2 என்று தொடக்க வீரர்களை லுங்கி இங்கிடி காலி செய்தார்.பிறகு ஆட்டம் மழையால் கைவிடப்பட இந்தியா கிரேட் எஸ்கேப் ஆகி 2-2 என்று தொடர் சமன் ஆனது. இந்தத் தொடரின் நாயகனாக புவனேஷ்வர் குமார் தேர்வு செய்யப்பட்டார்.

    கோப்பை இரு அணிகளுக்கும் பகிர்ந்து அளிக்கப்பட்டது. இந்த தொடரின் நாயகனாக இந்தியாவின் புவனேஸ்வர் குமார் தேர்ந்தெடுக்கப்பட்டார். சர்வதேச கிரிக்கெட்டில் புவனேஸ்வர் குமார் பெறும் 4-வது தொடர் நாயகன் விருது இதுவாகும்.

    இதன்மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக தொடர் நாயகன் விருதை வென்ற இந்திய வேகப்பந்துவீச்சாளர் என்ற சாதனையை புவனேஷ்வர் குமார் படைத்துள்ளார். இதற்கு முன் ஜாகீர் கான் மற்றும் இஷாந்த் சர்மா ஆகிய இருவரும் தலா 3 தொடர் நாயகன் விருதுகளை வென்று இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    புவனேஷ்வர் விளையாடிய நான்கு போட்டிகளில் 6 விக்கெட்டுகளை எடுத்தார், கட்டாக்கில் நடந்த இரண்டாவது T20I யில் ஒரு நான்கு விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். அவரது மூன்று விக்கெட்டுகள் பவுல்டு. ஹர்ஷல் படேல் தொடரை அதிக விக்கெட்டுகளுடன் முடித்தது குறிப்பிடத்தக்கது.
    Published by:Muthukumar
    First published:

    Tags: Bhuvneshwar Kumar, India vs South Africa

    அடுத்த செய்தி