ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

கொரோனா அறிகுறிகள்: வீட்டுத் தனிமையில் புவனேஷ்வர் குமாரும் மனைவியும்

கொரோனா அறிகுறிகள்: வீட்டுத் தனிமையில் புவனேஷ்வர் குமாரும் மனைவியும்

புவனேஷ்வர் குமார் - மனைவி.

புவனேஷ்வர் குமார் - மனைவி.

கொரோனா வைரஸ் தொற்றியதற்கான அறிகுறிகள் தோன்றியதால் இந்திய கிரிக்கெட் புவனேஷ்வர் குமாரும் அவரது மனைவியும் தங்களைத் தனிமைப் படுத்திக் கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 • Cricketnext
 • 1 minute read
 • Last Updated :

  மீரட்டில் தங்கள் இல்லத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இருவரும் குவாரண்டைன் செய்து கொண்டுள்ளனர். புவனேஷ்வர் குமார் தாயாருக்கு கொரோனா பாசிட்டிவ் என்பதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதைத் தொடருந்து இருவருக்கும் வைரஸ் அறிகுறிகள் உருவானதாகத் தெரிகிறது.

  ஆனாலும் இருவரும் வீட்டுத்தனிமையில் இருந்தாலும் இவர்களுக்கு பாசிட்டிவ் என்று வந்ததா என்று உறுதியாகத் தெரியவில்லை என்றும் சில செய்திகள் தெரிவிக்கின்றன.

  மே மாதம் 21ம் தேதி புவனேஷ்வர் குமாரின் தாயாருக்கு கொரோனா பாசிட்டிவ் ஆனது. இதனையடுத்து குடும்பத்தினர் டெஸ்ட் செய்து கொண்டனர் ஆனால் முடிவு நெகட்டிவ் என்று வந்தது.

  கடந்த மாதம் புவனேஷ்வர் குமாரின் தந்தை கிரண் பால் சிங் லிவர் கேன்சரில் இறந்தார், இவருக்கு வயது 63. அந்த சோகத்திலிருந்தே இவரது குடும்பம் இன்னும் விடுபடாத நேரத்தில் தாயாருக்கும் கொரோனா பாசிட்டிவ் ஆகி மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளதாகத் தெரிகிறது.

  தற்போது இங்கிலாந்து செல்லும் இந்திய அணியில் புவனேஷ்வர் குமார் இல்லை. இதனால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி வாய்ப்பை புவனேஷ்வர் நழுவ விட்டுள்ளார்.

  ஆனால் இலங்கை செல்லும் இந்திய அணியில் புவனேஷ் குமார் இடம்பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவருக்கு கேப்டன்சி கிடைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

  புவனேஷ்வர் குமார் இதுவரை 21 டெஸ்ட்கள், 117 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் ஆடியுள்ளார். இரு வடிவங்களிலும் 246 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.

  சமீபத்தில் டெஸ்ட் போட்டிகளில் ஆட புவனேஷ்வர் குமார் விருப்பமில்லாமல் இருக்கிறார் என்று சில செய்திகள் அடிபட உடனே ட்விட்டரில் அப்படியெல்லாம் இல்லை, எல்லா வடிவத்திலும் ஆடவே வீரர்கள் அனைவருமே விரும்புவார்கள் என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

  Published by:Muthukumar
  First published:

  Tags: Corona Symptoms, India Cricket