Home /News /sports /

போய் இலங்கை அல்லது பாகிஸ்தான் ஜெர்சியை அணிந்து வா: இந்திய ரசிகர்களுக்கு அனுமதி மறுப்பால் அதிர்ச்சி

போய் இலங்கை அல்லது பாகிஸ்தான் ஜெர்சியை அணிந்து வா: இந்திய ரசிகர்களுக்கு அனுமதி மறுப்பால் அதிர்ச்சி

இந்திய ரசிகர்களுக்கு அனுமதி மறுப்பு

இந்திய ரசிகர்களுக்கு அனுமதி மறுப்பு

ஆசியோ கோப்பை இறுதிபோட்டியான பாகிஸ்தான் - இலங்கை ஆட்டத்த காண இந்திய ஜெர்சியை அணிந்தவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • interna, Indiadubaidubaidubai
    ஆசியக் கோப்பை 2022 இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் தோல்வி அடைந்து இலங்கை வெற்றி பெற்று கோப்பையைத் தட்டிச் சென்றது. ஆனால் இந்தப் போட்டியை காண வந்த இந்திய ரசிகர்கள், ‘இந்திய ஜெர்சி அணிந்தால் அனுமதி இல்லை, போய் பாகிஸ்தான் அல்லது இலங்கை ஜெர்சியை அணிந்து வாருங்கள்’ என்று திருப்பி அனுப்பப்பட்டச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இங்கிலாந்தின் பார்மி ஆர்மி போல் இந்திய ரசிகர்கள் குழு பாரத் ஆர்மி என்று பெயரைச்சூட்டிக்கொண்டு போட்டிகளுக்கு வருவது வழக்கமாகியுள்ளது. இந்த பாரத் ஆர்மியைச் சேர்ந்த இந்திய ரசிகர்களைத்தான் நேற்று துபாய் ஸ்டேடியத்தில் அனுமதிக்கவில்லை.

    பாதுகாப்பு அலுவலர் ஒருவர் போய் இந்திய ஜெர்சியை மாற்றிக்கொண்டு பாகிஸ்தான் அல்லது இலங்கை ஜெர்சி அணிந்து வாருங்கள் என்று கூறினாராம், இதை அவர்கள் ட்விட்டரில் பகிர்ந்துள்ளனர்.



    பாதுகாப்பு அதிகாரி தன்னை தள்ளியதாகவும், போ போய் பாகிஸ்தான், அல்லது இலங்கை ஜெர்சி அணிந்து வா என்று கூறியதாகவும் டிவிட்டர் வீடியோவில் அவர் தெரிவித்து வீடியோ பதிவிட்டுள்ளார்.
    ஷாக்கிங் ட்ரீட்மெண்ட் என்று இவர்கள் ட்விட்டரில் வீடியோ பதிவிட்டுள்ளனர். மேலும் ஐசிசி மற்றும் ஆசியக் கிரிக்கெட் கவுன்சில் ஆகியவற்றையும் இந்த பாரத் ஆர்மி டிவிட்டரில் ‘டேக்’ செய்துள்ளனர்.
    Published by:Murugesh M
    First published:

    Tags: Asia cup cricket, India, Pakistan cricket, Sri Lanka

    அடுத்த செய்தி