• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • எங்களையா வாக் ஓவர் கொடுக்கச் சொன்னீங்க ‘பஜ்ஜி’ ?- இப்ப என்னாச்சு?- கிண்டல் வீடியோ

எங்களையா வாக் ஓவர் கொடுக்கச் சொன்னீங்க ‘பஜ்ஜி’ ?- இப்ப என்னாச்சு?- கிண்டல் வீடியோ

ஹர்பஜனைக் கிண்டலடித்த அக்தர்

ஹர்பஜனைக் கிண்டலடித்த அக்தர்

  • Share this:
    இந்தியா-பாகிஸ்தான் டி20 உலகக்கோப்பைப் போட்டிக்கு முன்பாக ஹர்பஜன் சிங், ஷோயப் அக்தரைக் கலாய்க்கையில், ‘வாக் ஓவர் கொடுத்துடுங்க பாகிஸ்தான், நீங்களாவது, ஜெயிக்கறதாவது என்று கூறினார், அதற்கு ஷோயப் அக்தர் நேற்று பாகிஸ்தான் ஒரு விக்கெட்டைக் கூட கொடுக்காமல் இந்திய அணியப் பந்தாடியது குறித்து பதிலடி கொடுத்துள்ளார்.

    151 ரன்கள் இலக்கை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் நொறுக்கியது, ரிஸ்வான், பாபர் அசாம் விக்கெட்டை எடுக்கவே முடியவில்லை. பும்ரா, புவனேஷ்வர், ஷமி, ஜடேஜா என்று வந்தார்கள், சாத்து வாங்கினார்கள் சென்றார்கள். பாகிஸ்தானுக்கு எதிராக விக்கெட் இனி அடுத்த உலகக்கோப்பையில்தான் என்று ஆகிவிட்டது இந்தியாவுக்கு.

    ஆனால் பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள், பாபர் அசாம் ஆகியோரும் மகிழ்ச்சியைக் கட்டுப்படுத்துங்கள், ஒரேயடியாகப் போக வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளனர், அதாவது அடக்கி வாசிப்போம் ஓவர் துள்ளல் வேண்டாம் என்று கூறியுள்ளனர்.

    இந்நிலையில் ராவல் பிண்டி எக்ஸ்பிரஸ் ஷோயப் அக்தர், பாகிஸ்தான் ரசிகர்களுக்கு கோலியை பிடிக்கும் ரோகித் சர்மாவை ரொம்ப ரொம்ப பிடிக்கும் நம்ம ஊர் இன்சமாம் தான் ரோகித் சர்மா என்று கொண்டாடுவதாக முன்பு இணக்கமாகப் பேசியவர் தற்போது ஹர்பஜன் சிங்கை எல்லோரும் செல்லமாக பஜ்ஜி என்று அழைப்பத் போல் அழைத்து  நட்பு ரீதியாக ஹர்பஜன் சிங்கை ரிலாக்ஸ் செய்யுமாறு கலாய்த்துள்ளார். அந்த வீடியோவும் சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.

    ஹர்பஜன் சிங் முன்பு கூறிய போது, “எப்படியும் நாங்கதான் ஜெயிக்கப் போறோம், விளையாடி என்ன பயன்? பேசாமல் நாங்கதான் ஜெயிச்சுட்டோம்னு வாக் ஓவர் கொடுத்துட்டு போங்க” என்று அக்தரைக் கலாய்த்தார்.



    இப்போது பாகிஸ்தானின் மிகப்பெரிய வெற்றியை அடுத்து ஷோயப் அக்தர், “ஹேய் பஜ்ஜி! நாங்க வாக் ஓவர் கொடுக்கணுமா? இல்லையா? என்ன செய்யலாம், கொண்டாடலாம், நாங்க கொண்டாடறோம், பாவம் நீங்க பொறுத்துக்கோங்க” என்று கலாய்த்துள்ளார்.

    Also Read: லெஜண்ட் லெஜண்ட் தான் - தோல்வியடைந்தாலும் பாகிஸ்தான் வீரர்களுடன் தோனி உரையாடல்
    இதையும் பாருங்க: India vs Pakistan T20 WC- ரசிக உள்ளங்களை அள்ளிய கோலியின் செய்கை- வீடியோ

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: