முகப்பு /செய்தி /விளையாட்டு / 2ஆவது டெஸ்டிலும் இந்திய அணி அபார வெற்றி… ஜடேஜா – அஷ்வின் சுழலில் சுருண்டது ஆஸ்திரேலியா…

2ஆவது டெஸ்டிலும் இந்திய அணி அபார வெற்றி… ஜடேஜா – அஷ்வின் சுழலில் சுருண்டது ஆஸ்திரேலியா…

2ஆவது டெஸ்டில் மொத்தம் 10 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் ஜடேஜா.

2ஆவது டெஸ்டில் மொத்தம் 10 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் ஜடேஜா.

ஆஸ்திரேலிய அணியின் ஹெட் 43 ரன்களும், லபுஸ்சேன் 35 ரன்களும் எடுக்க மற்றவர்கள் ஒற்றை இலக்கத்தில் வெளியேறினர். ஜடேஜா 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

இந்திய அணியின் அற்புதமான சுழற்பந்து வீச்சில் ஆஸ்திரேலிய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து சுருண்டது. 115 ரன்களை இலக்காக கொண்டு விளையாடிய இந்திய அணி எளிதாக அடைந்து, 2ஆவது டெஸ்டிலும் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தியது. ஆஸ்திரேலிய அணி ஆதிக்கம் செலுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 3ஆவது நாளிலேயே இந்திய பந்துவீச்சாளர்கள் ஆட்டத்தை முடித்துள்ளனர். முதல் டெஸ்டில் வெற்றி பெற்ற நிலையில் இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான 2ஆவது டெஸ்ட் டெல்லியில் நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வந்தது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

அந்த அணியின் தொடக்க வீரர் உஸ்மான் கவாஜா அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 81 ரன்கள் எடுத்தார். ஹேண்ஸ்கோம் 72 ரன்கள் எடுக்க மற்றவர்கள் சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில், ஆஸ்திரேலிய அணி 78.4 ஓவரில் அனைத்துவிக்கெட்டுகளையும் இழந்து 263 ரன்கள் எடுத்தது. முதல் இன்னிங்ஸில் ஷமி 4 விக்கெட்டுகளையும், அஷ்வின், ஜடேஜா 3 விக்கெட்டுகளையும் எடுத்தனர். இதையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 262 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக அக்சர் படேல் 74 ரன்களும், கோலி 44 ரன்களும், அஷ்வின் 37 ரன்களும் எடுத்தனர். ஆஸ்திரேலிய அணியின் நாதன் லியோன் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதையடுத்து 1 ரன் முன்னிலை பெற்ற நிலையில், ஆஸ்திரேலிய அணி தனது 2 ஆவது இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய 2ஆம் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலியா 1 விக்கெட் இழப்புக்கு 61 ரன்கள் எடுத்திருந்தது. இதையடுத்து இன்று 3ஆம் நாள் ஆட்டம் தொடர்ந்தபோது, விக்கெட்டுகள் அடுத்தடுத்து விழத் தொடங்கின. அந்த அணியின் ஹெட் 43 ரன்களும், லபுஸ்சேன் 35 ரன்களும் எடுக்க மற்றவர்கள் ஒற்றை இலக்கத்தில் வெளியேறினர். குறிப்பாக ஹேண்ஸ்கோப், கேப்டன் கம்மின்ஸ், குன்மன் ஆகியோர் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர். 31.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 113 ரன்கள் மட்டுமே ஆஸ்திரேலிய அணி எடுத்து. அந்த அணி 114 ரன்கள் முன்னிலை பெற்ற நிலையில், 115 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களத்தில் இறங்கியது. ஓபனிங் பேட்ஸ்மேன் கே.எல்.ராகுல் வழக்கம்போல மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். லியோன் பந்துவீச்சில் அவர் 1 ரன் எடுத்திருந்தபோது அலெக்ஸ் கேரியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 2 சிக்சர் 3 பவுண்டரியுடன் அதிரடியாக விளையாடிய கேப்டன ரோஹித் 20 பந்துகளில் 31 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். விராட் கோலி 20 ரன்களும், ஷ்ரேயாஸ் ஐயர் 12 ரன்களும் எடுத்தனர்.  26.4 ஓவர்களில் 4 விக்கெட்டை இழந்த இந்திய அணி 118 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. புஜாரா 31 ரன்களும், விக்கெட் கீப்பர் எஸ்.கே. பரத் 23 ரன்களும் எடுத்து களத்தில் இருந்தனர். இந்த வெற்றியின் மூலம் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

First published:

Tags: Cricket