முகப்பு /செய்தி /விளையாட்டு / இந்திய கிரிக்கெட் தொடரிலிருந்து 3ஆவது ஆஸி. வீரர் விலகல்…

இந்திய கிரிக்கெட் தொடரிலிருந்து 3ஆவது ஆஸி. வீரர் விலகல்…

ஆஷ்டோன் அகர்

ஆஷ்டோன் அகர்

3 ஆவது டெஸ்டில் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றாலோ அல்லது டிரா செய்தாலோ தொடரை கைப்பற்றி விடும்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

டேவிட் வார்னர், ஜோஷ் ஹேசில்வுட்டை தொடர்ந்து இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து 3 ஆவது வீரராக ஆல் ரவுண்டர் ஆஷ்டோன் அகர் விலகியுள்ளார். இதற்கான காரணங்கள் தற்போது வெளிவந்துள்ளன. இந்திய மண்ணில் மிக மோசமான தோல்விகளை ஆஸ்திரேலிய அணி சந்தித்து வரும் நிலையில், அகர் தாயகம் திரும்பியுள்ளார். ஆஸ்திரேலிய அணி டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தில் இருக்கிறது. இருப்பினும் இந்தியாவுக்கு எதிராக நடந்து முடிந்துள்ள முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலியா படு தோல்வையை சந்தித்துள்ளது.

குறிப்பாக 2 டெஸ்ட் போட்டிகளும் 3 நாட்களுக்கு மேல் நடைபெறவில்லை. அந்த அளவுக்கு ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங் படு மோசமாக உள்ளது. அந்த அணியினர் சுழற்பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறி வருகின்றனர். 2 டெஸ்ட் போட்டிகளில் 32 விக்கெட்டுகளை ஆஸ்திரேலிய அணி சுழற்பந்து வீச்சில் இழந்துள்ளது. இந்நிலையில் காயம் காரணமாக அந்த அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் டேவிட் வார்னரும், பந்துவீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட்டும் நாட்டிற்கு திரும்பியுள்ளனர். இருவரின் இழப்பு ஆஸ்திரேலிய அணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது. அதே நேரம் ஆல்ரவுண்டர் கேமரூன் கிரீன் அணியில் இணைந்திருப்பது பலமாக கருதப்படுகிறது.

இந்நிலையில் மற்றொரு ஆல்ரவுண்டரான ஆஷ்டன் அகர் கடைசி 2 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விலகியுள்ளார். ஆஸ்திரேலியாவில் ஷெபில் ஷீல்டு கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் வெஸ்டர்ன் ஆஸ்திரேலிய அணிக்காக விளையாட அகர் விடுவிக்கப்பட்டுள்ளார். தற்போது அவர் சொந்த நாட்டிற்கு திரும்பியுள்ளார். இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3ஆவது டெஸ்ட் போட்டி மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றாலோ அல்லது டிரா செய்தாலோ தொடரை கைப்பற்றி விடும். இதனால் இந்த போட்டி முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

First published:

Tags: Cricket