உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல்: 3 இறுதி ஆட்டங்கள் வேண்டும் என ரவி சாஸ்திரி வலியுறுத்தல்

ரவி சாஸ்திரி.

வரும் ஜூன் 18ம் தேதி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்தியா-நியூசிலாந்து மோதும் இறுதிப் போட்டி நடைபெறுகிறது, இனி இறுதிப் போட்டி 3 ஆட்டங்கள் இருந்தால் நல்லது என்கிறார் ரவிசாஸ்திரி.

 • Share this:
  இரண்டரை ஆண்டுகளாக நடைபெறும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி என்பது மிகப்பெரிய ஒரு நிகழ்வு இது ஒரு இறுதிப் போட்டியில் தீர்மானிக்கப்படுவது கூடாது 3 பைனல்கள் வைக்க வேண்டும் என்கிறார் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி.

  ஏற்கெனவே கடுமையான, நெருக்கமான பயணங்களால் உடலும் மன ஆரோக்கியமும் பாதிக்கப்படுவதாக விராட் கோலி புகார் கூறும் வேளையில் இவர் கூறுவதை கோலி ஏற்பாரா என்று தெரியவில்லை. ஒருநாள் போட்டி என்றால் 3 பைனல் சரி, டெஸ்ட் போட்டி ஏற்கெனவே சவாலானது இதில் 3 டெஸ்ட் பைனல் வைக்க வேண்டும் என்கிறார் ரவி சாஸ்திரி.

  இது தொடர்பாக ரவிசாஸ்திரி கூறும்போது, “இரண்டரை ஆண்டுகள் நடத்தப்படும் டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இறுதிப்போட்டியை 3 ஆட்டங்களாக நடத்தியிருக்க வேண்டும்.

  ஒரே ஆட்டத்தின் மூலம் வெற்றியாளரை தீர்மானிப்பது சரியல்ல. வருங்காலத்தில் டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை தொடர்ந்து நடத்த விரும்பினால், இறுதிப்போட்டியை 3 ஆட்டங்கள் கொண்டதாக நடத்துவதே சிறந்தது. தற்போது முதல்முறையாக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நடக்க உள்ளது. இது மிகப்பெரிய போட்டியாக இருக்கப்போகிறது.

  டெஸ்ட் கிரிக்கெட் தான் உங்களது உண்மையான திறமையை சோதிக்கும் ஒன்றாக இருக்கும். இது ஒன்றும் 3 அல்லது மூன்றரை மாதங்களில் நடந்து முடிந்துவிடவில்லை. இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் மோதி இந்தியாவும், நியூசிலாந்தும் இறுதிசுற்றை எட்டியுள்ளன. ஆனாலும் 3 இறுதிப் போட்டிகள் என்றாலும் விரைவில் 3 போட்டிகளையும் முடிக்க வேண்டும், ஏனெனில் ஐசிசியின் பிற போட்டிகளுக்கும் வழி விட வேண்டும்” என்றார் ரவிசாஸ்திரி.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  ரவிசாஸ்திரி கருத்தை ஆமோதித்த விராட் கோலி, “ரவி கூறுவது போல் 3 இறுதிப் போட்டிகள் மதிப்பு மிக்கதாக இருக்கும். இது ஒரு மிகப்பெரிய நிகழ்வு. இத்தனை காலம் சேர்த்து வைத்த கடின உழைப்புக்கான அச்சாரமாகும். கடந்த 5-6 ஆண்டுகளாக தர அளவில் மேலெழும்பி வந்த நாங்கள் இந்த பைனைல் ஆடுவதை மிகவும் பெருமையாகவும் மதிப்பு மிக்கதாகவும் கருதுகிறோம்.
  Published by:Muthukumar
  First published: