• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • Eng vs NZ| டி20 உலகக்கோப்பையின் மிகச்சிறந்த ஆட்டம்- நியூசிலாந்தின் செமிபைனல் வெற்றியை புகழ்ந்து தள்ளிய சேவாக்

Eng vs NZ| டி20 உலகக்கோப்பையின் மிகச்சிறந்த ஆட்டம்- நியூசிலாந்தின் செமிபைனல் வெற்றியை புகழ்ந்து தள்ளிய சேவாக்

நியூசிலாந்து அணிக்கு சச்சின் சேவாக் பாராட்டு

நியூசிலாந்து அணிக்கு சச்சின் சேவாக் பாராட்டு

“இந்த உலகக்கோப்பையில் பிரமாதமான ஆட்டம் என்றால் இதுதான். வாவ் டேரில் மிட்செல். ஜிம்மி நீஷம் கேம் சேஞ்சர். நியூசிலாந்து பரபரப்பான ஆட்டம். இறுதிக்குள் நுழைந்ததற்கு வாழ்த்துக்கள்”

  • Share this:
    அபுதாபியில் நேற்று நடைபெற்ற டி20 உலகக்கோப்பை செமிபைனல் ஆட்டத்தில் நியூசிலாந்து இலக்கை சேஸ் செய்த விதமும் இரு அணிகளும் கடைசி வரை போராடியதன் போட்டித்தன்மையையும் விரேந்திர சேவாக் ஷோயப் அக்தர் உள்ளிட்ட முன்னாள் வீரர்கள் விதந்தோதியுள்ளனர்.

    2019 உலகக்கோப்பையில் கோப்பையை இங்கிலாந்து பறித்துச் சென்றதற்கு நியூசிலாந்து டி20 உலகக்கோப்பையில் பழி தீர்த்தது. 2015-லிருந்து இங்கிலாந்து எப்படி மோர்கன் தலைமையில் முன்னேறி வந்ததோ அதே போல்தான் நியூசிலாந்து அணியும் கேன் வில்லியம்சன் தலைமையில் சாதனைகள் பல புரிந்தது. நேற்று மோர்கனா, கேன் வில்லியம்சனா என்றால் கேன் வில்லியம்சன் தான் உத்தி ரீதியாக சிறந்த கேப்டனாகத் திகழ்ந்தார்.

    இந்நிலையில் சச்சின் டெண்டுல்கர் தன் ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது: என்ன ஒரு பிரில்லியண்ட் கிரிக்கெட். போட்டியை வென்றதோடு இதயங்களையும் வென்றது நியூசிலாந்து. மிட்செலின் கிரேட் இன்னிங்ஸ், அவருக்கு உறுதுணையாக கான்வே, நீஷம் இருந்தனர். கடைசியில் பவுண்டரி எல்லையில் பேர்ஸ்டோவுக்கு நிகழ்ந்தது 2019 இறுதிப் போட்டியில் போல்ட்டுக்கு நிகழ்ந்ததை நினைவு படுத்தியது, என்றார்.



    விரேந்திர சேவாக் தன் சமூக ஊடகப் பக்கத்தில், “இந்த உலகக்கோப்பையில் பிரமாதமான ஆட்டம் என்றால் இதுதான். வாவ் டேரில் மிட்செல். ஜிம்மி நீஷம் கேம் சேஞ்சர். நியூசிலாந்து பரபரப்பான ஆட்டம். இறுதிக்குள் நுழைந்ததற்கு வாழ்த்துக்கள்” என்றார்.

    ஹர்பஜன் சிங், “தனித்துவமான போட்டி. கிளாஸ், வாட் எ வின், வாட் எ டீம் தட் இஸ்” என்று அகமகிழ்ந்து போனார்.

    ஷோயப் அக்தர் இங்கிலாந்தை கிண்டல் செய்யும் மீம் வெளியிட்டுள்ளார். விவிஎஸ், லஷ்மண், “2017-ல் கிரிக்கெட்டை விட்டே போய் விடலாம் என்று நினைத்தார் நீஷம். ஆனால் இன்று போட்டியைத் திருப்பும் இன்னிங்ஸை ஆடிவிட்டார். எப்போதும் விட்டுக் கொடுக்கக் கூடாது, கிரிக்கெட் ஒரு பெரிய டீச்சர்” என்று கூறியுள்ளார்.

    இர்பான் பதான், “நியூசிலாந்து அணியில் சூப்பர் ஸ்டார்கள் இல்லை. 11 திடமான வீரர்கள் கொண்ட அணி. வெல் டன்.

    அஸ்வின், “டேரில் மிட்செலிடமிருந்து என்ன ஒரு இன்னிங்ஸ்!”

    இந்த வெற்றியின் மூலம் 2019 ஐசிசி உலகக்கோப்பை இறுதி, 2021 ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வெற்றி, இப்போது 2021 டி 20 உலகக்கோப்பை இறுதி என்று சாதனை புரிந்துள்ளது, ஹைப் இல்லாத ஆர்ப்பாட்டம் இல்லாத அணிதான் சாதிக்கும் என்பதற்கு நியூசிலாந்து உதாரணம். இந்திய முகாமில் சப்தம் ஓவராக இருக்கும் களத்தில் ஒன்றும் இருக்காது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: