தோனி சூறாவளி ஆட்டம்! இருந்தும் ஒரு ரன்னில் தோல்வியடைந்த சோகம்

அதிரடியாக ஆடிய தோனி, 48 பந்துகளில் 5 பவுன்டரி, 7 சிக்ஸர்களுடன் 84 ரன்களைக் குவித்தார். #RCBvCSK

news18
Updated: April 22, 2019, 11:48 AM IST
தோனி சூறாவளி ஆட்டம்! இருந்தும் ஒரு ரன்னில் தோல்வியடைந்த சோகம்
பெங்களூரு அணி
news18
Updated: April 22, 2019, 11:48 AM IST
சென்னை அணிக்கு எதிரானப் போட்டியில் பெங்களூரு அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

நடப்பு ஐ.பி.எல் சீசனின் 39-வது லீக் போட்டியில் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதையடுத்து பெங்களூரு அணி களமிறங்கியது. முதலில் பேட் செய்த பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் எடுத்தது.

தோனிஅடுத்த களமிறங்கிய சென்னை அணியின் தொடக்க வீரர்களான ஷான் வாட்சன் 5 ரன்களிலும், டூ ப்ளிஸிஸ் 5 ரன்களிலும், சுரேஷ் ரெய்னா ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து சென்னை அணி திணறிய நிலையில், அம்பதி ராயுடு நிதான ஆடி 29 ரன்களைச் சேர்ந்தார். கேதர் ஜாதவும் 9 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்ததாக இறங்கிய தோனி, எதிரணியின் பந்துகளை சிதறடித்தார்.

அவருடன் ஜோடி சேர்ந்த வீரர்கள் அடுத்தடுத்த ஆட்டமிழந்த நிலையில், தோனி தனி ஒருவனாக பெங்களூரு அணியின் பந்து வீச்சைத் சிதறடித்தார். அதிரடியாக ஆடிய தோனி, 48 பந்துகளில் 5 பவுன்டரி, 7 சிக்ஸர்களுடன் 84 ரன்களைக் குவித்தார். இறுதி ஓவரில் 26 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், மூன்று சிக்ஸ்கள், ஒரு பவுண்டரி மற்றும் இரண்டு ரன்கள் அடித்தார் தோனி.

இறுதி ஒரு பந்துக்கு இரண்டு ரன்கள் தேவைப்பட்ட நிலையில், இறுதி பந்தை தோனி அடிக்காமல் பைஸ் ஓட முயற்சித்தபோது, மறுபுறம் இருந்த ஷர்துல் தாகூரை விக்கெட் கீப்பர் படேல், ரன் அவுட் செய்தார். இதன்மூலம், பெங்களூரு அணி 1 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

Loading...


Also see:

First published: April 22, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...