#RRvRCB | ராஜஸ்தான் அணிக்கு 159 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது பெங்களூரு!

பெங்களூரு அணியின் சார்பில் தொடக்க வீரர்களாக கேப்டன் விராட் கோலி மற்றும் பிரித்வி பட்டேல் களமிறங்கினர்.

news18
Updated: April 3, 2019, 9:15 AM IST
#RRvRCB | ராஜஸ்தான் அணிக்கு 159 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது பெங்களூரு!
பெங்களூர் அணி
news18
Updated: April 3, 2019, 9:15 AM IST
ராஜஸ்தான் அணிக்கு எதிரானப் போட்டியில் ராயல்ஸ் சேலஞ்சர்ஸ் அணி 4 விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் எடுத்துள்ளது.

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 14-வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.

டாஸ்வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் ரஹானே பந்து வீச்சைத் தேர்வு செய்தார். பெங்களூரு அணியின் சார்பில் தொடக்க வீரர்களாக கேப்டன் விராட் கோலி மற்றும் பிரித்வி பட்டேல் களமிறங்கினர்.

விராட் கோலி 23 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்த களமிறங்கிய டிவில்லியர்ஸ் 13 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். ஷிம்ரான் ஹெட்ம்யெர் 1 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அதிரடியாக ஆடிய பிரித்வ் பட்டேல் மட்டும் 67 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். ஆட்டநேர முடிவில் மார்கஸ் ஸ்டோனிஸ் 31 ரன்களிலும், மொயின் அலி 18 ரன்களிலும் களத்தில் நின்றனர். 20 ஓவர் முடிவில் பெங்களூரு அணி 4 விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் குவித்துள்ளது.

Check Live Scores Here... 


Loading...
விளையாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.





 

Also see:



ஐ.பி.எல் தகவல்கள்




First published: April 2, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...