ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

பெங்கால் ரஞ்சி அணியில் மாநில விளையாட்டுத் துறை அமைச்சர்

பெங்கால் ரஞ்சி அணியில் மாநில விளையாட்டுத் துறை அமைச்சர்

அமைச்சரும் கிரிக்கெட் வீரருமான மனோஜ் திவாரி

அமைச்சரும் கிரிக்கெட் வீரருமான மனோஜ் திவாரி

மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ் ஆட்சியில் வங்காளத்தின் விளையாட்டு மற்றும் இளையோர் விவகார அமைச்சராக பதவி வகிக்கும் மனோஜ் திவாரி பெங்கால் ரஞ்சி அணியில் இடம்பெற்றுள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ் ஆட்சியில் வங்காளத்தின் விளையாட்டு மற்றும் இளையோர் விவகார அமைச்சராக பதவி வகிக்கும் மனோஜ் திவாரி பெங்கால் ரஞ்சி அணியில் இடம்பெற்றுள்ளார்.

மனோஜ் திவாரி முதல் தரக் கிரிக்கெட்டில் 17வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார் மனோஜ் திவாரி. மார்ச் 2020-ல் கடைசியாக மனோஜ் திவாரி சவுராஷ்டிரா அணிக்கு எதிராக ரஞ்சி இறுதி ஆட்டத்தில் ஆடினார்.

பெங்கால் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார், சிவ்பூர் தொகுதியில் பாஜக வேட்பாளர் ரதின் சக்ரவர்த்தியை தோற்கடித்து எம்.எல்.ஏ. ஆனார். பிறகு மம்தா இவரை அமைச்சராகவும் நியமித்தார்.

கொரோனா பாதிப்பினால் இடையூறாக அமைந்த கடந்த ரஞ்சி சீசனில் மனோஜ் திவாரி ஆடவில்லை, இப்போது அபிமன்யூ ஈஸ்வரன் தலைமையில் மனோஜ் திவாரி என்ற இந்த அமைச்சர் களமிறங்குகிறார்.

ரஞ்சி கிரிக்கெட்டில் குரூப் பி-யில் பெங்கால் அணி, விதர்பா, ராஜஸ்தான், கேரளா, ஹரியாணா, திரிபுரா அணிகளுடன் சேர்க்கப்பட்டுள்ளது. ஜனவரி 13ம் தேதி பெங்கால் அணி திரிபுரா அணியைச் சந்திக்கிறது.

Also Read: சிட்னி டெஸ்ட்: அடைக்கப்பட்ட 2 புலிகள் உள்ளன.. கூண்டை திறக்கப் போகிறேன்- இங்கிலாந்து ‘அடேங்கப்பா!’

Also Read: இந்த பூமியின் பெரிய அணிகளுள் இந்திய அணியும் ஒன்றாம்- முன்னாள் ஆஸி. பவுலர் ‘டூ மச்’

 கொரோனா பீடித்த பெங்கால் அணி:

பெங்கால் ரஞ்சி அணியின் பல உறுப்பினர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். ஜனவரி 6-7 ம் தேதிகளில் பெங்கால் அணி, ப்ரிதிவி ஷா தலைமை மும்பை அணியுடன் 2 நாள் பயிற்சி ஆட்டத்தில் ஆடுகிறது.

First published:

Tags: Cricket, Ranji Trophy, West Bengal Assembly Election 2021