ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

‘சி.எஸ்.கே. கேப்டனாக பென் ஸ்டோக்ஸ் நியமிக்கப்படலாம்…’ – நியூஸி. முன்னாள் வீரர் கணிப்பு

‘சி.எஸ்.கே. கேப்டனாக பென் ஸ்டோக்ஸ் நியமிக்கப்படலாம்…’ – நியூஸி. முன்னாள் வீரர் கணிப்பு

பென் ஸ்டோக்ஸ் - தோனி

பென் ஸ்டோக்ஸ் - தோனி

கடந்த ஐபிஎல் தொடரில் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகிய தோனி, அதனை ஜடேஜாவுக்கு முதலில் அளித்திருந்தார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக பென் ஸ்டோக்ஸ் நியமிக்கப்படலாம் என்று நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் ஸ்காட் ஸ்டைரிஸ் கூறியுள்ளார்.

நடந்து முடிந்த ஐபிஎல் மினி ஏலத்தில் இங்கிலாந்து அணியின் ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வாங்கப்பட்டுள்ளார். ரூ. 16.25 கோடி கொடுத்து அவரை சென்னை அணி வாங்கியிருக்கிறது.

சென்னை அணியில் அதிகம் விலைகொடுத்து வாங்கப்பட்ட வீரராக பென் ஸ்டோக்ஸ் மாறியுள்ளார். தொடர்ச்சியான அதிரடி ஆட்டம், பேட்டிங் பவுலிங்கில் சிறப்பான திறமை, தேவைப்பட்டால் கேப்டன் பொறுப்பு என அனைத்தும் செய்யக்கூடிய வீரராக பென் ஸ்டோக்ஸ் பாராட்டப்படுகிறார்.

CSK Playing XI : சிஎஸ்கே அணியில் விளையாட இருக்கும் 11 வீரர்கள் இவர்கள் தான்!

இந்நிலையில், சென்னை அணியின் கேப்டனாக அவர் நியமிக்கப்படலாம் என்று நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டனும் பிரபல வர்ணனையாளருமான ஸ்காட் ஸ்டைரிஸ் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது-

பென் ஸ்டோக்ஸ் சென்னை அணியின் கேப்டனாக நியமிக்கப்படுவார் என்று நினைக்கிறேன். ஏனென்றால் தோனி தனது கேப்டன்ஷிப்பை இன்னொருவருக்கு அளிக்க முயற்சித்து வருகிறார். இந்த முறை தோனிக்கு நல்ல வாய்ப்பு அமைந்திருக்கிறது. நிச்சயமாக கேப்டன்ஷிப் பொறுப்பை பென் ஸ்டோக்ஸிடம் அவர் அளிப்பார் என்று நினைக்கிறேன்.

இவ்வாறு ஸ்டைரிஸ் கூறியுள்ளார்.

25 ஆவது பிறந்த நாளை கொண்டாடும் இந்தியாவின் தங்கமகன் நீரஜ் சோப்ரா… மறக்க முடியாத 5 சாதனைகள்

கடந்த ஐபிஎல் தொடரில் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகிய தோனி, அதனை ஜடேஜாவுக்கு அளித்தார். ஆனால் ரிசல்ட் மோசமாக அமைந்ததால் மீண்டும் கேப்டன் பொறுப்பை தோனியே ஏற்றுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Chennai Super Kings